சென்னை: மாநகரைத் தூய்மையாக வைத்திருப்பதற்குரிய ஆலோசனைகளைத் தெரிவிக்க பொது மக்கள் முன்வர வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சியில் உள்ள இருநூறு வார்டுகளையும் திறந்தவெளி மலம், சிறுநீர் கழிக்காத மாநகரமாகவும் குப்பை இல்லாத மாநகரமாகவும் சான்று பெற மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் பொது மக்களுக்கு ஏதேனும் மாறுபட்ட கருத்துகள் இருப்பின் அவற்றையும் தெரிவிக்குமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

