திமுக முன்னாள் எம்பி கொலை: உறவினர் கைது

திமுக முன்னாள் எம்பி கொலை: உறவினர் கைது

1 mins read

சென்னை: திமுக முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மஸ்­தான் தனது உற­வி­ன­ரால் படு­கொலை செய்­யப்­பட்­டது தெரிய வந்­துள்­ளது. இத­னால் திமுக வட்­டா­ரங்­களில் அதிர்ச்சி நில­வு­கிறது.

இது தொடர்­பாக ஐந்து பேர் கைதா­கி­ உள்­ள­னர்.

66 வய­தான மஸ்­தான் சென்னை­யில் வசித்து வந்­தார். தமி­ழக சிறு­பான்மை வாரிய துணைத்­தலை­வ­ரா­கப் பொறுப்பு வகித்து வந்த அவர் கடந்த 22ஆம் தேதி மார­டைப்­பால் கால­மா­ன­தாகக் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில் அவ­ரி­டம் ஓட்­டு­நராக வேலை­பார்த்து வந்த உறவி­ன­ரான 26 வய­தான இம்­ரான் பாஷா என்­ப­வர் ரூ.15 லட்­சம் கடன் வாங்­கி­யி­ருந்த நிலை­யில், அதை திருப்­பிக் கேட்­டுள்­ளார் மஸ்­தான். பணத்தை திருப்­பிக் கொடுக்க முடி­யா­த­தால் நண்­பர்­களு­டன் சேர்ந்து திட்­ட­மிட்டு, மஸ்தா­னைக் கொன்­ற­தாக இம்ரான் ஒப்­புக் கொண்­டுள்­ளார்.