சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் நேற்று ஐந்தாவது நாளாக நீடித்தது.
கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும் அதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, முரண்பாடுகளைக் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
கடந்த 27ஆம் தேதி முதல் தங்களது குடும்பத்தாருடன் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிநேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் அது தோல்வியில் முடிந்தது.

