ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்
சென்னை: இணையம் வழி நடத்தப்படும் சூதாட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இணைய வழி சூதாட்டத்துக்கு தடைவிதிக்கும் தமிழக அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
'இலவச வேட்டி, சேலை உறுதி'
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

