புத்தாண்டு: காவல்துறை தீவிர கண்காணிப்பு

புத்தாண்டு: காவல்துறை தீவிர கண்காணிப்பு

2 mins read
69062577-f1e8-42f5-92b8-7cf9dbc60c41
-

சென்னை: புத்­தாண்டு தினத்­தை­யொட்டி சென்னை மாந­க­ரம் முழு­வ­தும் பலத்த பாது­காப்பு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

தற்­போது நாட்­டின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் பயங்­க­ர­வா­தி­கள் ஊடு­ருவி இருப்­ப­தாக மத்­திய புல­னாய்வு முக­மை­கள் எச்­ச­ரித்­துள்­ளன. இதை­ய­டுத்து நாடு முழு­வ­தும் அதி­ர­டிச் சோதனை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படு­கின்­றன.

புத்­தாண்டு வேளை­யில் அசம்­பா­வி­தங்­கள் ஏதும் நிக­ழக்­கூ­டாது என்­ப­தில் மாநில அர­சு­கள் கவ­ன­மாக இருக்க வேண்­டும் என மத்­திய அரசு அறி­வு­றுத்தி உள்­ளது.

இதைக் கவ­னத்­தில் கொண்டு தமி­ழக அரசு பாது­காப்பு ஏற்­பா­டு­களை பலப்­ப­டுத்­தி­யுள்­ளது.

மெரினா, பெசன்ட்­ந­கர் கடற்­கரைப் பகு­தி­களில் நேற்று இரவு போக்­கு­வ­ரத்து தொடர்­பாக சில கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டன.

அண்­மைய சில ஆண்­டு­க­ளாக புத்­தாண்டு கொண்­டாட்­டங்­களுக்கு சில கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­ப­டு­கின்­றன.

இந்­நி­லை­யில், 'உயி­ரி­ழப்பு இல்லா புத்­தாண்­டுக்கு முந்­தைய நாள்' என்ற நோக்­கத்­து­டன் தமிழக காவல்­துறை ஓர் அறிக்­கையை வெளி­யிட்­டது.

அதன்­படி, கடற்­கரை சாலை அருகே மக்­கள் திர­ளா­கக் கூடு­வதை தடுக்­கும் வகை­யில், போக்கு­வ­ரத்­துக்கு தடை விதிக்­கப்­பட்­டது. அதே­போல், சென்னை மாந­க­ரில் உள்ள மேம்­பா­லங்­களும் நேற்று இரவு பத்து மணி முதல் இன்று காலை ஆறு வரை மூடப்­பட்­டன.

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காவல்துறை யினர் சுற்றுக்காவல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இன்று இரவு வரை இந்தக் கண்காணிப்பு நீடிக்கும் எனத் தெரிகிறது.

போக்­கு­வ­ரத்து விதி­மு­றை­களை மீறு­வோர் மீது உட­ன­டி­யாக வழக்­கு­கள் பதிவு செய்­யப்­படும் என்­றும் மது அருந்­திய பின் வாக­னங்­களை ஓட்­டு­வோர், அதிக வேகத்­தில் செல்­வோர் மீது கடும் நட­வ­டிக்கை பாயும் என காவல்­துறை எச்­ச­ரித்­தது.

இதற்­கி­டையே, சென்னை கடற்­க­ரை­யில் பெண்­க­ளுக்கு எதிரான வன்­மு­றையை ஒழிப்­போம் என்ற கருப்­பொ­ரு­ளு­டன் அமைக்­கப்­பட்­டுள்ள மணல் சிற்பத்தை முதல்­வர் ஸ்டா­லின் பார்­வை­யிட்­டார்.

புத்­தாண்­டை­யொட்டி பெண்­களுக்­கான இடர் இல்லா சமு­தாயத்தை உரு­வாக்­கி­டு­வோம் என்ற முழக்­கத்­து­டன் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த தமி­ழக அரசு திட்­ட­மிட்­டுள்­ளது. இது தொடர்­பாக கடற்­க­ரை­யில் வைக்­கப்­பட்­டுள்ள பதா­கை­யில் அவர் கையெ­ழுத்­திட்­டார்.