சென்னை: அமெரிக்காவைச் சேர்ந்த சகோதரர்களான 30 வயது பிரைஸ், 26 வயது டைவர் ஆகிய இருவரும் ஆண்டுதோறும் புத்தாண்டு வேளையில் ஏதாவது ஒரு நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம்.
அந்த வகையில் இம்முறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
இணையம் வழி ஆட்டோ பயணம் குறித்து படித்த பின்னர் அதில் ஆர்வம் கொண்ட இருவரும், சென்னை வந்தடைந்ததும் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்தி மாமல்லபுரம் சென்றுள்ளனர்.
ஆட்டோ பயணம், சாலையோர உணவகங்களில் கிடைக்கும் உணவு ஆகியவை தங்கள் பயணத்தை இனிமை நிறைந்ததாக மாற்றிவிட்டதாக அமெரிக்க சகோதரர்கள் இருவரும் கூறிஉள்ளனர்.

