வடமதுரை: புத்தாண்டில் குற்றச் சம்பவங்கள் குறைய வேண்டி, திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல்நிலையம் சார்பில் அய்யலூர் அருகே திண்டுக்கல்- திருச்சி சாலையில் உள்ள வண்டி கருப்பண்ணசாமி கோயி லில் பொங்கல் வைத்து கிடா வெட்டி வழிபாடு நடத்தப்பட்டது.
புத்தாண்டில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க வேண்டியும் கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் குறைய வேண்டியும் கிடா வெட்டி விருந்து நடத்தப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.
வடமதுரை காவல் நிலைய அதிகாரிகள், வேடசந்தூர் காவல் நிலையம், எரியோடு காவல் நிலையம் அருகே உள்ள வேடசந்தூர் குற்றப்பிரிவு தனிப்படை நிலையம் ஆகியவற்றின் அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு வழிபட்டனர்.

