வெளிநாட்டவர்களின் 1,000 கிலோ மீட்டர் ஆட்டோ பயணம்

வெளிநாட்டவர்களின் 1,000 கிலோ மீட்டர் ஆட்டோ பயணம்

1 mins read
1bd61f18-e48f-4bec-bef0-5651c8e22a50
-

சென்னை: பல்­வேறு நாடு­களில் இருந்து தமி­ழ­கம் வந்­துள்ள சுற்­றுலாப் பய­ணி­கள் சென்னை முதல் திரு­வ­னந்­த­பு­ரம் வரை 1,000 கிலோ மீட்­டர் தூரம் ஆட்டோ பய­ணம் மேற்­கொண்­டுள்­ள­னர்.

ஜெர்­மனி, நியூ­சி­லாந்து, இங்­கி­லாந்து, அமெ­ரிக்கா, நெதர்­லாந்து, ஆஸ்­தி­ரே­லியா நாடுகளைச் சேர்ந்த 70 பேர் தமி­ழ­கம் வந்துள்­ள­னர்.

இவர்­கள் அனை­வ­ரும் 32 ஆட்­டோக்­களில் தனித்­த­னிக் குழுக்­களா­கப் பிரிந்து சாக­சப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ள­னர். கடந்த 28ஆம் தேதி இவர்­க­ளு­டைய பய­ணம் தொடங்­கி­யது. பத்து நாள்­களில் கேரளா சென்­ற­டை­வர்.

''உல­கின் பல்­வேறு பகுதி­களுக்குச் சென்று, அப்பகுதிகளில் உள்ள கலா­சார பின்­பு­லம் கொண்ட மக்­க­ளைச் சந்­தித்து வரு­கி­றோம். தற்­போது தென்­னிந்­திய கலாச்­சா­ரம், பண்­பா­டு­கள் குறித்து அறிய ஆட்டோ பய­ணம் மேற்­கொண்­டுள்­ளோம். தமி­ழக மக்­க­ளின் உண­வும் வர­வேற்­பும் வெகு­வா­கக் கவர்ந்­துள்­ளது," என இக்­கு­ழு­வைச் சேர்ந்த மேத்யூ செய்தியாளர்களிடம் தெரி­வித்­தார்.