பதவி விலகவில்லை என நிதியமைச்சர் விளக்கம்

1 mins read

சென்னை: நிதி­ய­மைச்­சர் பி.டி.ஆர். பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் இம்மாதம் 2ஆம் தேதி வெளி­யிட்ட டுவிட்­டர் பதி­வால் அவர் அமைச்­சர் பத­வி­யில் இருந்து வில­கப்­போ­வ­தாக வதந்தி பர­வத் தொடங்­கி­யது.

இந்நிலையில் அமைச்சர் இதற்கு விளக்­க­ம­ளித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இப்பதிவில், "நான் முன்னர் வெளி­யிட்ட டுவிட்­டர் பதிவு தற்­செ­ய­லா­னது. என் வார்த்­தை­களைச் சிலர் தவறுதலாகப் புரிந்துகொண்டுள்­ள­னர்.

"நான் எழு­தும் புத்­த­கத்­தின் உள்­ள­டக்­கங்­கள் மிக­வும் நேர்­மை­யாக இருக்­கும் என்ற வகை­யில் குறிப்­பிட்டு இருந்­தேன். ஆனா­லும் சில­ருக்கு ஏற்­பட்ட கவ­லைக்­காக மன்­னிக்­க­வும்.

"இனி நான் அமைச்­ச­ராக இருக்­கும் வரை அதை வெளி­யிட முடி­யாது என்­ப­தால் அவ்­வாறு தெரிவித்திருந்தேன். எந்தவோர் அமைச்­ச­ரும் என்றாவது ஒரு­நாள் அலு­வ­ல­கத்தை விட்டு வெளி­யே­றித்தான் ஆக வேண்­டும்," என்று திரு பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.