சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானார்

1 mins read
bb45d9f8-f1d1-4bf9-8825-1cadfc96aa75
-

ஈரோடு: ஈரோடு கிழக்­குத் தொகு­தி­யின் காங்­கி­ரஸ் கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் திரு­ம­கன் ஈவெரா (படம்) நேற்­றுப் பிற்­ப­கல் கால­மா­னார். அவ­ருக்கு வயது 46.

தமிழ்­நாடு காங்­கி­ர­சின் முன்­னாள் தலை­வர் ஈவிகேஎஸ் இளங்­கோ­வ­னின் மக­னான திரு­ம­கன், தமி­ழக காங்­கி­ர­சின் மாநி­லப் பொதுச் செய­லா­ள­ரா­கப் பொறுப்­பேற்­றி­ருந்­தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கட்­சி­யின் தக­வல் தொழில்­நுட்­பம், சமூக ஊட­கத் துறை­யின் தலை­வ­ரா­கப் பணி­யாற்­றி­னார்.

நேற்­றுக் காலை நெஞ்சு வலிக்­கா­கத் தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் திரு­ம­கன் ஈவெரா தம்மை எதிர்த்­துப் போட்­டி­யிட்ட அதி­முக வேட்­பா­ள­ரை­விட 8,523 வாக்­கு­கள் அதி­கம் பெற்­றார்.