2 கோடிக்கு மேற்பட்டோருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

2 கோடிக்கு மேற்பட்டோருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

2 mins read

சென்னை: பொங்­கல் பண்­டி­கை­யை­யொட்டி தமி­ழக அரசு சார்­பில் நியா­ய­வி­லைக்­கடை அட்­டை­தா­ரர்­க­ளுக்கு ஒரு கிலோ பச்­ச­ரிசி, ஒரு கிலோ சர்க்­கரை, முழுக் கரும்பு ஆகி­ய­வற்­று­டன் ஆயி­ரம் ரூபாய் ரொக்­கப்­ப­ண­மும் பொங்­கல் பரி­சுத் தொகுப்­பாக வழங்­கப்­பட உள்­ளது.

இதன் தொடர்­பில், கோபா­ல­பு­ரத்­தில் உள்ள தமிழ்­நாடு நுகர்­பொ­ருள் வாணி­பக் கழ­கத்­தின் சேமிப்புக் கிடங்­கில் உண­வுப்­ பொ­ருள் வழங்­கல் துறை அமைச்­சர் சக்­க­ர­பாணி பொங்­கல் பரி­சுத் தொகுப்பு விநி­யோ­கப் பணி­கள் குறித்து ஆய்வு மேற்­கொண்­டார்.

இதை­ய­டுத்து செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அவர், தமி­ழ­கத்­தில் நியா­ய­வி­லைக்­கடை அட்­டை­தாரர்­க­ள் இரண்டு கோடியே 19 லட்­சத்து 14 ஆயி­ரத்து 73 பேருக்குப் பொங்­கல் பரி­சுத் தொகுப்பு வழங்­கப்­படும் என்­றார்.

இதற்­கான அடை­யாள வில்­லை­கள் தற்­போது விநி­யோ­கம் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

முதல்­வர் மு.க. ஸ்டா­லின் பொங்­கல் பரி­சுத் தொகுப்பு வழங்­கும் திட்­டத்தை இம்­மா­தம் 9ஆம் தேதி தொடங்­கி­வைப்­பார் என்று அமைச்­சர் சக்­க­ர­பாணி கூறி­னார்.

தமி­ழ­கத்­தில் உள்ள அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை பொங்­கல் பரி­சுத் தொகுப்பு வழங்­கப்­படும் எனக் கூறப்­பட்­டது.

ஒரு நியா­ய­வி­லைக் கடை எத்­தனை அட்­டை­தா­ரர்­க­ளுக்­குச் சேவை வழங்­கு­கிறது என்­ப­தன் அடிப்­ப­டை­யில் ஒரு நாளைக்கு எத்­தனை பேருக்கு இந்­தத் தொகுப்­பு­களை வழங்­க­லாம் என்­பது முடிவு செய்­யப்­படும் என்றார் அமைச்சர்.

விவ­சா­யி­களும் விவ­சாய சங்­கப் பிர­தி­நி­தி­களும் பொங்­க­லுக்கு கரும்பு விநி­யோ­கம் செய்ய வேண்­டும்.

பன்­னீர் கரும்­புக்கு அதிக விலை கிடைக்­காது என்பதால் அதனை அர­சாங்­கம் கொள்­மு­தல் செய்து வழங்க வேண்­டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்­தார்­கள்.

அத­னைப் பரி­சீ­லனை செய்த முதல்­வர் ஸ்டா­லின், இரண்டு கோடியே 19 லட்­சத்து 14 ஆயி­ரத்து 73 அட்­டை­தா­ரர்­க­ளுக்­கும் இலங்கை மறு­வாழ்வுத் தமி­ழர்­கள் 19 ஆயி­ரத்து 269 பேருக்­கும் கரும்பு வழங்­கும்­படி உத்­த­ர­விட்­டுள்­ளார் என்று திரு சக்கரபாணி குறிப்பிட்டார்.

தமி­ழ­கத்­தின் 17 மாவட்­டங்­களில் கரும்பு பயி­ரி­டப்­ப­டு­கிறது. அந்த மாவட்ட ஆட்­சி­யர்­கள் தலை­மை­யில் குழுக்­கள் அமைக்­கப்­பட்டு கரும்பு கொள்­மு­தல் செய்­யப்­பட உள்­ளது. ஒரு கரும்­புக்கு ரூ.33 விலை நிர்­ண­யம் செய்­யப்­பட்டு உள்­ளது.

கரும்பை இடைத்­த­ர­கர்­கள் இன்றி மாவட்ட ஆட்­சி­யர் தலை­மை­யி­லான குழுக்­களே நேர­டி­யாகக் கொள்­மு­தல் செய்­யும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆய்­வின்­போது உணவு, கூட்­டு­ற­வுத்­துறை கூடு­தல் தலை­மைச் செய­லா­ளர் ஜெ. ராதா­கி­ருஷ்­ணன், உண­வுப்­பொ­ருள் வழங்­கல் மற்­றும் நுகர்­வோர் பாது­காப்­புத்­துறை ஆணை­யர் வே. ராஜா­ரா­மன், தமிழ்­நாடு வாணிபக் கழக மேலாண்மை இயக்­கு­நர் சு. பிர­பா­கர் ஆகியோர் உள்ளிட்ட அரசு உயர் அதி­கா­ரி­கள் அமைச்சர் சக்கரபாணியுடன் இருந்­த­னர்.