சென்னை: ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர், விஜயவாடா ஆகிய நகரங்களில் சென்ற மாதம் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மூன்றாவது 3வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இவற்றில் 22 மாநிலங்களைச் சேர்ந்த 4,000க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 177 பழங்குடியின மாணவ, மாணவியரும் இதில் பங்குபெற்றனர்.
போட்டிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 10 தங்கம், 27 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 67 பதக்கங்களை வென்று தமிழ்நாடு ஐந்தாம் இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்தது.
பதக்கங்கள் வென்ற மாணவ,மாணவிகள் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
அரியலூர் மாவட்ட இருளர் இனப் பழங்குடி மக்களுக்கு முந்திரி சேகரம் செய்து கொள்ளும் உரிமைக்கான ஆணைகளை வழங்கும் அடையாளமாக 10 பேருக்கு முதல்வர் ஆணைகளை வழங்கினார்.
இதன்மூலம் 500 குடும்பங்களைச் சேர்ந்த 2,000 இருளர் இன மக்கள் பலனடைந்தனர். தொழிலாளர்களாக இருந்த இவர்கள் இப்போது தொழில்முனைவர்களாக மாறியுள்ளனர்.

