குடும்பப் பெண்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் கைது

குடும்பப் பெண்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் கைது

1 mins read

சென்னை: குடும்­பப் பெண்­களை வீட்­டில் அடைத்து வைத்து பாலி­யல் தொழி­லில் ஈடு­ப­டுத்­திய பெண் தர­கரை சென்னை காவல்­துறை கைது செய்­தது.

திரு­வேற்­காடு பகு­தி­யைச் சேர்ந்த 28 வய­தான சங்­கீதா என்­ப­வர் வேலை வாங்­கித் தரு­வதா­கக் கூறி குடும்­பப் பெண்­களை ஏமாற்றி மோசடி செய்­தது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

போது­மான வரு­மா­ன­மின்றி தவிக்­கும் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த பெண்­களை நோட்­டம் விடும் சங்­கீதா, பின்­னர் அவர்­களை அணுகி, ஆசை வார்த்­தை­க­ளைப் பேசி, தன்­னு­டன் அழைத்து வரு­வது வழக்­கம்.

பின்­னர் சென்­னை­யில் அடுக்கு­மா­டிக் குடி­யி­ருப்­பில் அப் பெண்­களை அடைத்து வைத்து பாலி­யல் தொழி­லில் ஈடு­பட கட்டா­யப்­ப­டுத்தி உள்­ளார்.

மேலும், அப்­பெண்­க­ளின் குடும்­பத்­தா­ருக்குச் சந்­தே­கம் வரக்­கூ­டாது என்­ப­தற்­காக அவ்­வப்­போது கைப்பேசி மூலம் சில நிமி­டங்­கள் பேச வைத்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பில் பாலி­யல் தொழில் நடப்­ப­தாக சென்னை காவல்­துறைக்கு கிடைத்த ரக­சி­யத் தக­வ­லின் பேரில் உய­ர­தி­கா­ரி­கள் அதி­ரடி நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

நேற்று முன்­தி­னம் பெண் தர­கர் சங்­கீதா பாலி­யல் தொழில் நடத்தி வந்த வீட்­டில் நுழைந்து சோதனை மேற்­கொண்­ட­போது இரண்டு குடும்­பப் பெண்­கள் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது.

அவர்­களை மீட்­ட­து­டன் சங்கீ­தா­வை­யும் கைது செய்த காவல்­து­றை­யி­னர், இக்­குற்­றத்­து­டன் தொடர்­பு­டைய மேலும் ஒரு­வ­ருக்கு வலை­வீ­சி­யுள்­ள­தாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.