ரூ.170,000 கோடி மதிப்புள்ள மென்பொருள் ஏற்றுமதி

2 mins read

அமைச்சர்: தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் ஓராண்டில் 18% வளர்ச்சி

நெல்லை: கடந்த ஒன்­றரை ஆண்­டு­களில் தக­வல் தொழில்­நுட்­பத்­துறையில் தமி­ழ­கம் சாத­னை­களைப் படைத்­துள்­ளது என்­றும் மென்­பொ­ருள் (செயலி) ஏற்றுமதியில் தமி­ழ­கம் வேகமாக முன்­னேறி வரு­வ­தா­க­வும் அமைச்­சர் மனோ தங்­க­ராஜ் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் இருந்து மென்­பொ­ருள் துறை சார்ந்த ஏற்­று­மதி­யா­னது ரூ.1.70 லட்­சம் கோடி­யாக அதி­க­ரித்­துள்­ளது என்று நெல்­லை­யில் தொழில்­நுட்ப நிறு­வனங்­கள், பொறி­யி­யல் பட்­ட­தாரி மாண­வர்­கள், புத்­தாக்க தொழில் முனை­வோர் ஆகி­யோ­ரு­ட­னான ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் பேசி­ய­போது அவர் குறிப்­பிட்­டார்.

இணைய பாது­காப்பு தொடர்­பாக பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­க­வும் இத்­து­றை­யில் பல்­வேறு மாற்­றங்­களைக் கொண்டு வந்­துள்­ள­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

"தமி­ழ­கத்­தில் மென்­பொ­ருள் துறை சார்ந்த சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்­கள் மூலம் ஒரு லட்­சத்து 243 கோடி ரூபாய்க்­கும் மற்­றவை மூலம் ரூ.70 ஆயி­ரம் கோடிக்­கும் மென்பொருள் ஏற்­று­மதி செய்­யப்­பட்­டுள்­ளது.

"இதன் மூலம் தேசிய அள­வில் தமி­ழ­கம் மூன்­றா­வது இடத்தைப் பிடித்­துள்­ளது. அடுத்த ஐந்­து­ஆண்­டு­களில் தமி­ழ­கத்­தில் தனி நபர் வரு­மா­னம் அதி­க­ரிக்­கும்," என்­றார் அமைச்­சர் மனோ தங்­க­ராஜ்.

இந்த நிகழ்­வின்­போது தமிழக அர­சின் திட்­டங்­கள் குறித்து பொது­மக்­கள் எளி­தில் தெரிந்துகொள்­ளும் வகை­யில் 'சேவை' என்ற பெய­ரில் `வாட்ஸ்-அப்' சேவை திட்­டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

தக­வல் தொழில்­நுட்­ப­வி­யல் சார்ந்த அர­சின் மின் ஆளுமை திட்­டங்­களை வெற்­றி­க­ர­மாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில் மற்ற மாநி­லங்­க­ளுக்கு தமிழ்­நாடு முன்­னோ­டி­யாக விளங்கி வரு­வ­தா­கவும் அமைச்சர் அப்போது குறிப்­பி்­ட்­டார்.

"தமி­ழக அரசு செயல்­ப­டுத்தி வரும் மக்­கள் நலத்­திட்­டங்­களின் பலன் தகு­தி­யா­ன­வர்­களுக்கு எளி­தா­க­வும் விரை­வா­க­வும் கிடைக்க வேண்­டும் என்ற அடிப்­ப­டை­யில் தக­வல் தொழில்­நுட்­பத்­து­றை­யின் மூலம் 12 இலக்க எண்­ணு­டன் மாநில குடும்ப தர­வுத்­த­ளத்­தின் அடிப்­ப­டை­யில் 'மக்­கள் அடை­யாள அட்டை' என்ற திட்­டம் செயல்­ப­டுகிறது.

"இத்­திட்­ட­மா­னது மத்­திய அர­சின் ஆதார் எண்­ணுக்குப் போட்­டி­யாகத் தொடங்­கப்­ப­ட­வில்லை," என்று அமைச்­சர் மனோ தங்­க­ராஜ் விளக்கம் அளித்தார்.

கடந்த ஓராண்­டில் மட்­டும் தக­வல் தொழில்­நுட்­பத்­துறை 18 விழுக்­காடு அளவுக்கு வளர்ச்சி கண்டுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், தமி­ழ­கத்­தில் மென்­பொருள் நிறு­வ­னங்­கள் அமைப்­ப­தற்­காக 68.80 ஏக்­கர் நிலம் வழங்­கப்­பட்­டுள்­ளது என்­றும் மிக விரை­வில் தக­வல் தொழில்­நுட்­பத்­துறை சார்பில் தொழில் முனை­வோர் மாநாடு தென் மாவட்­டங்­களில் நடத்­தப்­படும் என்­றும் தெரி­வித்­தார்.