பெண்களுக்குப் பாதுகாப்பு: முதல் இடத்தில் சென்னை

பெண்களுக்குப் பாதுகாப்பு: முதல் இடத்தில் சென்னை

1 mins read
8fbf017e-a3f8-4bd6-ab34-c7860ccca9d2
படம்: அஸெண்டஸ் -

புதுடெல்லி: பெண்கள் பாதுகாப்பாக பணிபுரிய உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்து உள்ளது. அடுத்தபடியாக புனே, பெங்களூரு, ஹைதரா பாத், மும்பை, அகமதாபாத், விசாகப்பட்டனம், கோல்கத்தா, கோவை, மதுரை ஆகிய நகரங் கள் இடம்பெற்றுள்ளன.

பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான நகரமாக மட்டு மல்லாமல், அதிக அளவு பெண்கள் பணிபுரியும் நகரமாகவும் சென்னை உள்ளதாக 'அவதார்' குழுமம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்திய நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.