ஸ்டாலின்: சேது சமுத்திர திட்டத்தை அதிமுகவும் பாஜகவும் எதிர்த்தன

ஸ்டாலின்: சேது சமுத்திர திட்டத்தை அதிமுகவும் பாஜகவும் எதிர்த்தன

1 mins read
f2d6a018-cacc-493e-9ce3-ff8c1aa54adc
-

சென்னை: சேது சமுத்­திர திட்­டம் நிறை­வேறி இருந்­தால் தமிழ்­நாட்­டில் தொழில்­வ­ளம் பெரு­கி­ இருக்­கும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் நடை­பெற்ற நூல் வெளி­யீட்டு விழா­வில் கலந்­து­கொண்டு பேசிய அவர், சேது சமுத்­திர திட்­டத்தை பாஜக­தான் தடுத்து நிறுத்­தி­யது என்­றார்.

"அத்­திட்­டம் நிறை­வேறி இருந்­தால் இந்­தி­யா­வுக்­குப் பெருமை கிடைத்­தி­ருக்­கும். தமிழ்­நாட்­டின் தொழில்­வ­ளம் பெரு­கி­யி­ருக்­கும். கடல்­சார் வணி­கம் மேம்­பட்டு, மீன­வர்­களின் வாழ்­வா­தா­ரம் மெரு­கே­றி­யி­ருக்­கும்.

"சேது சமுத்­திர பகு­தி­யில் பாலம் இருந்­த­தற்­கான ஆதா­ரமே இல்லை என்று மத்­திய அமைச்­சர் கஜேந்­தி­ர­சிங் ஷெகா­வத் இப்­போது சொல்லி இருக்­கி­றார்.

"இந்த திட்­டத்தை எப்­ப­டி­யும் செயல்­ப­டுத்த கரு­ணா­நிதி முனைந்­த­போது, அப்­போ­தைய மத்­திய அர­சும் இணைந்­தது. ஆனால் இந்த திட்­டம் தடுக்­கப்­பட்­டது. இந்த திட்­டம் நிறை­வேற்­றப்­பட்டு இருந்­தால் எத்­த­னையோ பயன்­களை தமி­ழ­கம் அடைந்­தி­ருக்­கும்," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

சேது திட்டம் நிறைவேறாமல் போனதற்கு பாஜகவும் அதிமுகவும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம்சாட்டிய அவர், அத்திட்டத்தை செயல்படுத்த முயன்ற முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மீண்டும் முயற்சிகளைத் தொடங்க வேண்டும் என்றார்.

"இது முன்னாள் முதல்வர்்களான அண்ணா, கருணாநிதியின் கனவு திட்டம். எனவே இந்த திட்டத்தை மீண்டும் நிறைவேற்றிடும் கடமை டி.ஆர்.பாலுக்கு இருக்கிறது. அவர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என்றார் மு.க.ஸ்டாலின்.