மதுரை: நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் உரிய நேரத்தில் அறிவிப்பார் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் அதிக காலம் இருப்பதால் கூட்டணி குறித்து அவசரப்படவில்லை என்றார்.
"தேமுதிகவில் இப்போது உள்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. அது நிறைவு பெற்றதும் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்தி தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்," என்றார் பிரேமலதா.