பெண்களுக்கு அனுமதி இல்லை; 10,000 ஆண்கள் கலந்துகொண்ட அசைவத் திருவிழா

பெண்களுக்கு அனுமதி இல்லை; 10,000 ஆண்கள் கலந்துகொண்ட அசைவத் திருவிழா

1 mins read
2cad4581-7d0a-4035-83e4-d63b552204a6
-

மதுரை: மதுரை மாவட்­டத்­தில் உள்ள கரும்­பாறை முத்­தையா கோயி­லில் வித்­தி­யா­ச­மான முறை­யில் அசைவ விழா கொண்­டா­டப்­ப­டு­கிறது.

இவ்­வி­ழா­வில் கலந்­து­கொள்ள பெண்­க­ளுக்கு அனு­மதி இல்லை. ஆண்­கள் மட்­டுமே பங்­கேற்று, உணவை சமைத்து விருந்­துக்கு வந்த ஆயி­ரக்கணக்­கான ஆட வர்­க­ளுக்குப் பரி­மா­றி­னர்.

மதுரை மாவட்­டம், திரு­மங்­க­லம் அருகே உள்ள அனுப்­பப்­பட்டி என்ற கிரா­மத்­தின் காவல் தெய்­வ­மாக கரும்­பாறை முத்­தையா கோயில் உள்­ளது.

இக்­கோ­யி­லில் கோபு­ரம், சாமி என சிலை­கள் கிடை­யாது. இங்­குள்ள பாறை­யையே சாமி­யாக மக்­கள் வணங்­கு­கின்­ற­னர்.

இக்­கோ­யி­லில் விவ­சா­ய­மும் தங்­கள் வாழ்­வா­தா­ர­மும் செழிக்க வேண்டி ஆண்­கள் மட்­டுமே பங்­கேற்­கும் அசைவ உண­வுத் திரு­விழா நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது.

இத­னை­யொட்டி, 1,500 கிலோ அரி­சி­யில் அசைவ உணவு தயா­ரிக்­கப்­பட்டு, முத்­தையா சுவா­மிக்கு படை­ய­லிட்டு, கோயில் திறந்­த­வெளி வளா­கத்­தில் பக்­தர்­க­ளுக்குப் பரி­மா­றப்­பட்­டது.

விழா­வில் திரு­மங்­க­லம், உசி­லம்­பட்டி, சோழ­வந்­தான், ஆண்­டிப்­பட்டி, தேனி, கம்­பம், விரு­து­ந­கர், சிவ­காசி உள்­ளிட்ட தென்­மா­வட்­டங்­க­ளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்­பட்ட ஆண் பக்­தர்­கள் கலந்துகொண்டு அசைவ உணவை உண்­ட­னர்.

இவ்­வி­ழா­வுக்கு பிறந்த பச்­சி­ளம் பெண் குழந்தை முதல் வய­தான மூதாட்டி வரை பங்­கேற்க அனு­மதி கிடை­யாது.

கறி விருந்து முடிந்­த­வு­டன் இலையை எடுக்க மாட்­டார்­கள். இலை காய்ந்­த­ பின்புதான் பெண்­கள் அந்தப் பகு­திக்கு செல்­ல­வேண்­டும் என்பது வழக்­கம்.