புத்தொழில் நிறுவனங்களில் வெளிநாட்டினர் முதலிட வசதி

புத்தொழில் நிறுவனங்களில் வெளிநாட்டினர் முதலிட வசதி

2 mins read
55751752-f49f-4d53-8103-6a971f9c5b06
-

பல நாடுகளிலும் வசிக்கும் தமிழர்களைக் கவர புதிய இணையத்தளம் தொடக்கம்

சென்னை: தமிழ்­நாட்­டில் தொடங்­கப்­படும் புத்­தொ­ழில் நிறு­வ­னங்­களில் உல­கத் தமி­ழர்­கள் முத­லீடு செய்ய ஏது­வாக தமிழ்­நாட்­டில் புதிய இணை­யத் தளம் தொடங்­கப்­பட்டு இருக்­கிறது.

தமி­ழக அர­சின் டான்­சிம் நிறு­வ­னத்­தின் குளோ­பல் தமிழ் ஏஞ்­செல்ஸ் www.tamilangels.fund என்ற அந்த இணை­யத் தளத்தை தமிழ்­நாட்­டின் முதல்­வர் மு க ஸ்டா­லின் திங்­கட்­கி­ழமை தொடங்கி வைத்­தார்.

வட­அ­மெ­ரிக்க தமிழ்ச் சங்­கப் பேரவை, தமிழ்­நாடு புத்­தொ­ழில், புத்­தாக்க இயக்­கம் இணைந்து நடத்­திய உல­கத் தமிழ் புத்­தொழில் முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில் அந்­தப் புதிய இணை­யத் தளம் தொடங்­கப்­பட்­டது.

தமிழ்­நாட்­டில் தொடங்­கப்­படும் புதிய புத்­தாக்க நிறு­வ­னங்­களில் இடம்­பெ­றக்­கூ­டிய முத­லீ­டு­கள் இது­வரை இல்­லாத அள­வுக்கு கடந்த ஆண்டு US$1.5 பில்­லி­ய­னாக அதி­க­ரித்து இருக்­கிறது என்­றும் இது 2021ஆம் ஆண்டை­விட 70 விழுக்­காடு அதி­கம் என்றும் முதல்­வர் தெரி­வித்­தார்.

இந்­தி­யா­வி­லேயே முதன்­முதலாக தமிழ்­நாட்­டில் ரூ.1,000 கோடி பசுமை நிதி­யம் அமைக்­கப்­படும் என்றும் அவர் அறி­வித்தார்.

பரு­வ­நிலை மாற்­றம் கார­ண­மாக தலை­தூக்கி உள்ள பிரச் சினை­க­ளுக்­குத் தீர்வு காணும் திட்­டங்­க­ளி­லும் தொழில்­நுட்­பங்­களி­லும் அந்த நிதி முத­லீடு செய்­யப்­படும்.

இதுபோன்ற ஆக்கபூர்­வ­மான முயற்­சி­களில் உல­க­ளா­விய தமிழ் முத­லீட்­டா­ளர்­கள் பெரு­ம­ள­வில் ஈடு­பட வேண்­டும் என்று முதல்­வர் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

அமெ­ரிக்­கா­வில் வாழும் தமிழர்­கள் அமெ­ரிக்க தமிழ் நிதி­யம் என்ற ஓர் அமைப்பை தொடங்கி இருக்­கி­றார்­கள்.

அந்த அமைப்பு தமிழ்­நாட்­டின் புத்­தொ­ழில், புத்­தாக்க நிறு­வ­னங்­களில் ரூ.16 கோடி முத­லீடு செய்து இருக்­கிறது என்­றும் இது ஊக்­க­மூட்­டு­வ­தாக இருப்­ப­தா­க­வும் திரு ஸ்டா­லின் தெரி­வித்­தார்.