90 வயது முதியவருக்கு 70 வயது காதலிகள்: சொத்தை மீட்டுத் தருமாறு 82 வயது மனைவி ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு

90 வயது முதியவருக்கு 70 வயது காதலிகள்: சொத்தை மீட்டுத் தருமாறு 82 வயது மனைவி ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு

2 mins read
a5441ee6-5339-4448-9197-29d2d6188318
படம்: பிக்ஸாபே -

சேலம்: சேலம் மாவட்­டத்­தைச் சேர்ந்த பழ­னி­யப்­பன், 90, என்­ப­வருக்கு எதி­ராக அந்த மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் புகார் ஒன்று தாக்­க­லாகி இருக்­கிறது.

மனு பற்றி உடனே விசா­ரணை நடத்­தும்­படி உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு இருக்­கிறது.

பழ­னி­யப்­ப­னின் தாலி கட்­டிய மனை­வி­யான பொன்­னம்­மாள், 82, தன்­னு­டைய 60 வயது மகள் கம­லா­வு­டன் ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­துக்கு வந்து அழுது புலம்பி தாக்­கல் செய்த புகா­ரில் பல விவரங்­கள் தெரி­விக்­கப்­பட்டன.

"என்­னு­டைய கண­வ­ரான பழ­னி­யப்­பன் ஏற்­கெ­னவே குப்­பாயி, 70, என்ற பெண்­ணு­டன் கள்­ளத்­தொ­டர்பு வைத்­தி­ருந்­தார். வேண்­டாம், வேண்­டாம் என்று பல­முறை நாங்­கள் கத்­தி­யும் கத­றி­யும் அவர் அந்­தத் தொடர்பை விட­வில்லை.

"அது போதாது என்று இப்­போது பழ­னி­யம்­மாள் என்ற வேறு ஒரு 70 வயது பெண்­ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருக்கிறார். எங்­க­ளின் ஒரே மகன் ஏற்­கெ­னவே தவ­றி­விட்டான். கள்­ளத்­தொ­டர்பு வைத்­தி­ருப்­ப­தோடு நின்­று­வி­டா­மல் பழ­னி­யம்­மா­ளுக்கு பல லட்­சம் ரூபாய் மதிப்­புள்ள எங்­க­ளின் 6.5 ஏக்­கர் நிலத்­தை­யும் என் கண­வர் எழு­திக்­கொ­டுத்­து­விட்­டார்.

"என்­னு­டைய பேரப்­பிள்­ளை­யுடன் நான் வசித்து வந்த வீட்டை இடித்து வெளியே துரத்­தி­வி­டப் போவ­தா­க­வும் என் கண­வர் மிரட்டு­கி­றார்.

"இந்த நிலை­யில், கூலி வேலை செய்து பிழைப்­ப­தைத் தவிர எனக்கு வேறு வழி­யில்லை. இந்த வய­தில் அது­வும் என்­னால் முடி­ய­வில்லை. ஆகை­யால், கண­வ­ரி­டம் இருந்து எங்­கள் சொத்தை மீட்டு எங்­க­ளுக்­குப் பாது­காப்பு வழங்­குங்­கள்.

"இல்லை என்­றால் என்னை கருணைக் கொலை செய்­து­விடுங்­கள்" என்று எழு­திய புகார் மனுவை ஆட்­சி­ய­ரி­டம் தாக்­கல் செய்த பொன்­னம்­மாள் கேவிக் கேவி அழு­தார். இது பற்றி உட­ன­டி­யாக விசா­ரணை நடத்­தும்­படி ஆட்­சி­யர் காவல்­து­றைக்கு உத்­த­ர­விட்டு இருக்­கி­றார்.