மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனையின் கட்டுமானப் பணிகள் அடுத்தாண்டுதான் தொடங்கும் என விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத் துவமனை கட்டப்படும் என நாடாளுமன்றத்தில் பாஜக அரசு அறிவித்தது.
இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மதுரை அருகே உள்ள தோப்பூர் தேர்வு செய்யப்பட்டு, 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆன நிலை யில், இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.
தமிழகத்துடன் சேர்த்து அறி விக்கப்பட்ட மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் கட்டப்பட்டு, சிகிச்சை களும் தொடங்கப்பட்டுவிட்டன.
தமிழக மருத்துவமனை கட்டப்படுவதற்கான தாமதம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், எய்ம்ஸ் ஆட்சிக் குழுக் கூட்டம் சென்னை யில் நடைபெற்றது.
இதில் பங்ேகற்ற மாணிக்கம் தாக்கூர், நிதி ஒதுக்கீட்டுக்கான ஆதாரங்கள் நிலுவையில் உள்ள தால் அடுத்தாண்டுதான் கட்டு மானப்பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

