சென்னை: தமிழ்நாட்டின் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தாதியர்க்கான 3,949 பணி இடங்கள் நிரப்பப்படும் என்று மக் கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் பணியாற்றியவா்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முன்னு ரிமை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் பேசியபோது, "கொரோனா காலத்தில் பணியாற்றிய தாதி யர்க்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் 38 மாவட்ட ஆட்சி யா்கள் மூலம் நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
"மாவட்ட சுகாதார மையங்கள் மூலம் 3,949 தாதியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
"இதற்கு முன்பு மாத ஊதிய மாக ரூ.14,000 வழங்கப்பட்ட நிலையில், இனி ரூ.18,000 மாத ஊதியமாக தாதியர்க்கு வழங்கப்படும். தங்களது சொந்த மாவட்டத்திலேயே பணியாற்றும் வாய்ப்பை தாதியர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
"கொரோனா காலத்துக்கு முன்பே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தாதியரில் ஏறக்குறைய 500 போ் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படவுள்ளனா்," என்றாா் அவா்.
இதனிடையே, கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட தாதியர்கள் தங்களுக்கு நிரந்தரப் பணி வழங்கக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
10வது நாளாக நேற்று மதுரை ஆட்சியர் அலுவலக வளாகம் முன் கண்களில் கறுப்புத் துணி கட்டி தாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அவர்கள் கூறுகையில், "கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் பணியாற்றிய எங் களை அரசு திடீரென வேலையில் இருந்து நீக்கியதால், நாங்கள் வாழ்வாதாரம் இழந்து சிரமப்படுகிறோம். எனவே, எங்களுக்கு நிரந்தரப் பணி வழங்கும்படி போராட்டம் நடத்தி வருகிறோம். வரும் நாட்களில் எங்கள் போராட்டம் மேலும் தீவிரமாகும்," என்றனர்.
அமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ள கொரோனா தாதிகள் சங்கக் கூட்டமைப்பு செயலர் ராஜேஷ் கூறுகையில், "தாதியருக்கு மீண்டும் தற்காலிக ஒப்பந்தப் பணி தேவையில்லை. இப்பணியில் தாதியர் சேரமாட்டார்கள். எங்களுக்கு பணிப் பாதுகாப்பு, நிரந்தர பணிதான் வேண்டும். எங்களது கோரிக்கையை வலியுறுத்தி தலைமைச் செயலகம் நோக்கி இன்று பேரணியாகச் செல்ல உள்ளோம்," என்று கூறினார்.

