ெசன்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சட்டசபையின் மாண்பு களை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டி உள்ள திமுக, அவரை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரி அதிபரைச் சந்தித்து வலி யுறுத்த முடிவு செய்துள்ளது.
அரசுடன் ஆளுநரின் மோதல் போக்கு தொடர்ந்து வருவதால் இடமாற்றம் செய்ய வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தின் வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களைக் கூட சட்டப்பேரவையில் வாசிக் காமல் ஆளுநர் புறக்கணித்துள்ளார் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே, பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள் ராஜ்பவனை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளன.
நாளை 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
இதனால் கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு அதிக பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
தமிழகச் சட்டசபையில் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் கடந்த திங்களன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
அரசு தயரித்துக் கொடுத்த உரையில் ஒருசில பகுதிகளை ஆளுநர் படிக்கவில்லை.
அவருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இத்தீர்மானத்தை முதல்வர் வாசித்துக்கொண்டிருக்கும்போதே ஆளுநர் கோபத்துடன் அவையை விட்டு வெளியேறினார்.
இதற்குக் கடும் கண்டனம் ெதரிவித்துள்ள தலைவர்கள், அவரை உடனடியாக திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி உள்ளனர்.
ஆளுநரைக் கண்டித்து மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்திய நிலையில், திமுக கூட்டணிக் கட்சி எம்பிக்கள் அதிபர் திரௌபதி முர்முவைச் சந்தித்துப் பேசுவதற்காக நேற்று டெல்லியில் காத்திருந்தனர்.
இதனிடையே, சட்டசபை மரபுகளை ஆளுநர், முதல்வர் இருவருமே மீறிவிட்டனர் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
"ஆளுநர் பிரச்சிைனயை விடவும் தமிழகத்தில் இன்னும் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. விவசாயிகளுக்கான வெள்ள நிவாரணம், கரும்பு தொடர்பான பிரச்சினை, நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் பிரச்சினை என பல பிரச்சினை களுக்குத் தீர்வு காணவேண்டிய தேவை உள்ளது.
"நாட்டுப் பண் முடிவதற்கு முன்பு ஆளுநர் வெளியேறியது மரபு மீறிய செயல்தான். அதற்காக, தொடர்ந்து இதுகுறித்து விவாதிப்பதில் பயன் இல்லை," என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

