எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் கறுப்பு ஆடையில் கும்பலாக வந்த அதிமுகவினர்

எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் கறுப்பு ஆடையில் கும்பலாக வந்த அதிமுகவினர்

1 mins read
d2ea664f-6886-48cd-af20-f957a821ecf0
-

சென்னை: நேற்றைய சட்டப் பேர வைக் கூட்டத்தொடரில் பங்கேற் பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அதிமுக எம்எல்ஏக் களும் கறுப்புச் சட்டை, புடவை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கைக் கான விவகாரத்தில் சபாநாயகர் இதுவரை ஒரு முடிவு எடுக்காமல் உள்ளதால் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்புச் சட்டை அணிந்து சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதி­மு­க­வின் இடைக்­கா­லப் பொதுச் செய­லா­ள­ராக பழ­னி­சாமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட நிலை­யில், ஓ.பன்­னீர்­செல்­வம் கட்­சி­யில் இருந்து நீக்­கப்­பட்­டார்.

ஓபி­எஸ் வகித்து வந்த எதிர்க்­கட்சி துணைத் தலை­வர் பத­விக்கு முன்­னாள் அமைச்­சர் உதயகுமாரை நிய­மிக்­கு­மாறு சபாநாய­க­ரி­டம் இபி­எஸ் தரப்பு கடி­தம் அளித்­துள்ளது. ஆனால், இது­வரை ஓ.பன்­னீர்­செல்­வம் பொறுப்­பிலிருந்து நீக்­கப்­ப­ட­வில்லை. நீதி­மன்­றத்­தில் வழக்கு இருப்­ப­தால் இது­தொடர்­பாக சபா­நா­ய­கர் இது­வரை முடிவு எடுக்­க­வில்லை எனக் கூறப்­ப­டு­கிறது.