அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

1 mins read
d8479160-6dbf-4fe5-8189-92de1516fff6
படம்: பிக்ஸாபே -

ெசன்னை: சிவ­கங்கை மாவட் டம், திரு­வள்­ளூர் மாவட்­டங்­களில் உள்ள பள்­ளி­க­ளுக்­குத் தேவை­யான பொருள்­களை அங்கு வசிக்­கும் மக்­களும் வெளி­நாட்­டில் வசிக்­கும் முன்­னாள் மாண­வர்­களும் சீர்­வ­ரி­சை­யாக வழங்கி உள்­ள­னர்.

மாண­வர்­கள் படிப்­பில் சிறந்து விளங்க தங்­க­ளால் இயன்­றதை செய்­துள்­ள­தாக அவர்­கள் கூறி­னர்.

சிவ­கங்கை மாவட்­டத்­தில் இளை­யான்­குடி அருகே அண்­டக்­குடி புதூர் அரசு நடு­நி­லைப்­பள்ளி உள்­ளது. இப்­பள்­ளி­யில் சுற்று வட்டாரங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள் படித்து வரு­கின்­ற­னர்.

இப்­பள்­ளிக்­குத் தேவை­யான பொருள்­களை அங்கு வசிக்­கும் கிராம மக்­களும் வெளி­நா­டு­களில் வேலை பார்க்­கும் முன்­னாள் மாண­வர்­களும் சீர்­வ­ரி­சை­யாக வழங்­கி­னர்.

பள்­ளிக்­குத் தேவை­யான கணினி, டிஜிட்­டல் கரும்­ப­லகை, நாற்­கா­லி­கள், உப­க­ர­ணங்­கள், எல்­இடி தொலைக்­காட்சி, மாண வர்­க­ளுக்­கான பரி­சுப்­பொ­ருள்­கள் உள்­ளிட்­ட­வற்றை 2 லட்­சம் ரூபாய் செல­வில் வாங்கி பள்­ளிக்கு எடுத்து வந்­த­னர்.

சீர்­வ­ரிசை எடுத்து வரு­வது போல் பொருள்­களை மேள­தா­ளம் முழங்க, பட்­டாசு வெடித்து ஊர்­வ­ல­மாக எடுத்து வந்து பள்ளி ஆசி­ரி­யர்­க­ளி­டம் வழங்­கி­னர்.

சீர்­வ­ரி­சையைக் கொண்டு வந்­த­வர்­களை ஆசி­ரி­யர்­கள் ஆரத்தி எடுத்து வர­வேற்­ற­னர்.

வெளி­நா­டு­களில் வேலை பார்க்­கும் முன்­னாள் மாண­வர் களும் கிரா­ம­மக்­களும் 'நாளை நமதே' என்ற வாட்ஸ்அப் குழு மூலம் நிதி திரட்டி இப்பொருள்­களை வாங்­கிக்கொடுத்­துள்­ள­தாக தக­வல்­கள் கூறின.

இதே­போல், திரு­வள்­ளூர் மாவட்­டம், மீஞ்­சூர் அருகே திரு­வெள்ளை வாயல் கிரா­மத்­தில் உள்ள அரசு தொடக்­கப்­பள்­ளிக்­குத் தேவை­யான ஒரு லட்­சம் ரூபாய் மதிப்­பி­லான பொருள்­களை முன்­னாள் மாண­வர்­களும் கிரா­மத்­தி­ன­ரும் ஊர்­வ­ல­மாக கொண்டு வந்து வழங்­கி­னர்.