அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க நீதிபதிகள் உத்தரவு

அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க நீதிபதிகள் உத்தரவு

1 mins read
f641ebb1-2462-43aa-a08b-44a593b3fa1a
படம்: பிக்ஸாபே -

சென்னை: திருச்­சி­யில் உரிய அனு­மதி இன்றி கட்­டப்­பட்ட அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பை இடிக்க உயர் நீதி­மன்ற மது­ரைக் கிளை உத்­த­ர­விட்­டுள்­ளது.

அனு­ம­தி­யின்றி இந்­தக் கட்­ட­டங்­க­ளைக் கட்­டு­வ­தற்கு துணை போன அதி­கா­ரி­கள் மீது துறை ரீதி­யான நட­வ­டிக்கை எடுக்­க­வும் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

திருச்சி மாவட்­டம், உய்­யக்­கொண்­டான் பகு­தி­யைச் சேர்ந்த சண்­மு­க­சுந்­த­ரம் என்­ப­வர் உயர் நீதி­மன்ற மது­ரைக் கிளை­யில் வழக்கு ஒன்­றைத் தாக்­கல் செய்­தார்.

அதில் உய்­யக்­கொண்­டான் திரு­ம­லைப் பகு­தி­யில் ஏறக்­குறைய 51 சென்ட் நிலத்­தில் 100 வீடு­கள் கொண்ட அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பு கட்­டப்­பட்­டுள்­ளது.

அந்­தக் குடி­யி­ருப்­பு­கள் 54 விழுக்­காடு அள­வுக்கு விதி முறை­களை மீறி கட்­டப்­பட்­டுள்­ளன என்­றும் அதனை இடிக்க உத்­த­ர­வி­ட­வேண்­டும் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.

இவ்­வ­ழக்கு நீதி­ப­தி­கள் மகா­தே­வன், சத்ய நாரா­யண பிர­சாத் அமர்வு முன்பு விசா­ர­ணைக்கு வந்­தது.

அப்­போது, அனு­ம­தி­யில்­லா­மல் கட்­டப்­பட்­டுள்ள கட்­ட­டத்தை தாம­த­மின்றி உட­ன­டி­யாக இடிக்க உத்­த­ர­விட்­ட­னர்.

இந்­தக் கட்­ட­டத்­தைக் கட்டு வதற்கு உடந்­தை­யாக இருந்த அனைத்து அதி­கா­ரி­கள் மீதும் துறை­ரீ­தி­யான நட­வ­டிக்கை எடுத்து, அது­கு­றித்து ஆறு வாரத்­தில் உயர்­நீ­தி­மன்ற மது­ரைக்­கி­ளை­யில் அறிக்கை தாக்­கல் செய்­ய­வேண்­டும் என்­றும் உத்­த­ர­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு செயல்­படும் அதி­கா­ரி­களை முக்­கி­யத்­து­வம் இல்­லாத பணி­க­ளுக்கு மாற்­ற­வேண்­டும் என்­றும் நீதி­ப­தி­கள் கூறி­யுள்­ள­னர்.

அத்­து­டன், கட்­ட­டத்­தின் உரி­மை­யா­ளர் அந்­தக் குடி­யி­ருப்­பில் வீடு­களை வாங்­கி­ய­வர்­க­ளுக்கு உரிய நிவா­ர­ணம் வழங்­க­வேண்­டும் என்­றும் உயர்­நீ­தி­மன்ற மது­ரைக்­கிளை நீதி­ப­தி­கள் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­னர்.