சென்னை: இன்றைய சூழலில் குடமுழுக்குத் தொடர்பான பத்திரி கைகள் அனைத்தும் முழுக்க முழுக்க தமிழிலேயே அச்சடிக்கப் படுவதாக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
பழனி முருகன் கோயிலில் நூற்றுக்கும் மேலான ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு, வேத மந்திரங்கள் தமிழில் வாசிக்கப்படுகின்றன. பழனி குடமுழுக்கு விழாவில் தமிழ் மந்திரமும் வேதங்களும் ஓதப்படும்.
இப்போதைய ஆட்சியில்தான் கோயில்களில் தேவாரமும் திருவாசகமும் ஒலிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

