ரூ.124 கோடி கடத்தல் தங்கம், போதைப்பொருள் பறிமுதல்; பெண்கள் உட்பட 122 பேர் கைது

ரூ.124 கோடி கடத்தல் தங்கம், போதைப்பொருள் பறிமுதல்; பெண்கள் உட்பட 122 பேர் கைது

2 mins read
fc4e3703-d608-41cf-8465-f1efc66aae48
-

சென்னை: சென்னை மீனம்பாக்­கம் விமான நிலை­யத்­தில் கடந்த ஓராண்­டில் மட்­டும் ரூ.124 கோடி மதிப்­பி­லான தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக சுங்­கத் துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அத்­து­டன், புதுமையான வழி முறைகளில் கடத்தப்பட்ட போதைப்­பொருள்­கள், வன­வி­லங்­கு­கள், வெளிநாட்­டுப் பணம், வைரங்­கள் உள்ளிட்டவையும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளன.

சென்னை விமான நிலை­யத்­தில் கடந்த 2022ஆம் ஆண்­டில் மட்­டும் ரூ.94 கோடியே 22 லட்­சம் மதிப்­பி­லான 205 கிலோ தங்­கம், ரூ.14 கோடி மதிப்­பி­லான 28 கிலோ போதைப்பொருள்­கள் ஆகியவற்றை சுங்­கத்­து­றை­யினர் பறிமுதல் செய்து, கடத்­த­லில் தொடர்­பு­டைய 104 பேரைக் கைது செய்­த­னர்.

அதே­போல் சென்­னை­யில் இருந்து வெளி­நா­டு­க­ளுக்கு கடத்த முயன்ற ரூ.11 கோடி மதிப்புடைய அமெ­ரிக்க டாலர், யூரோ நாணயம், அரேபியாவின் ரியால் உள்ளிட்டவையும் பறி­மு­தல் செய்­யப்­பட்டுள்­ளன.

இது­தொ­டர்­பாக 81 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்டு ஏழு பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

துபாய், ஷார்ஜா, குவைத், சவூதி அரே­பியா, மலே­சியா, தாய்­லாந்து ஆகிய நாடு­களில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்­தி வரப்பட்டு உள்­ள­தாக சுங்­கத்­துறை வெளி­யிட்­டுள்ள அதி­கா­ர­பூர்வ அறிக்­கை­யில் தெரி­விக்கப்பட்டுள்ளது.

வெளி­நா­டு­களில் இருந்து 12 முறை கடத்திவரப்பட்ட கொக்கேன், மெத்­தகுலோன், ஹெரா­யின், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

2021ஆம் ஆண்டில் 70 கோடி ரூபாய் மதிப்­புள்ள தங்­கத்தை சுங்க அதி­கா­ரி­கள் கைப்­பற்­றி­யிருந்த நிலையில், இது கடந்த ஆண்டு 94 கோடி­யாக அதி­க­ரித்து இருந்தது.

அதே­போல், போதைப்­பொ­ருள்­கள் மூலம் பறி­மு­தல் செய்­யப்­பட்ட தொகை ரூ.11 கோடி­யில் இருந்து ரூ.14 கோடி­யா­க­வும் வெளி­நாட்டுப் பணம் ரூ.9 கோடி­யில் இருந்து எறக்குறைய ரூ.11 கோடி­யா­க­வும் அதி­க­ரித்­து இருந்தது.

ஆகமொத்­தம் 2022ல் ரூ.124 கோடியே 88 லட்­சம் மதிப்­பி­லான தங்­கம், போதைப்­பொ­ருள் உள்­ளிட்­டவை கடத்­தப்­பட்­டுள்­ளன. 407 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்டு 122 கடத்­தல் ஆசா­மி­கள் கைது செய்­யப்­பட்­ட­னர். இவர்­களில் பெண்­களும் அடங்குவர் என்று சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தில் இருந்து டாமரின் குரங்குகள், மலைப்பாம்புகள், நரிக்குட்டிகள், தேள்கள், ஆமைகள் உட்பட 134 அரிய வகை வன உயிரினங்களைக் கடத்தி வந்த ஐவர் கைது செய்யப்பட்டனர். இந்த உயிரினங்கள் எந்த நாட்டில் இருந்து வந்ததோ அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டன. போதைப்பொருளும் வெளிநாட்டுப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.

படம்: தமிழக ஊடகம்