வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறித்த தகவல் சேகரிப்பு

வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறித்த தகவல் சேகரிப்பு

1 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் உள்ள வெளி மாநி­லத் தொழி­லா­ளர்­கள் குறித்து விவ­ரங்­கள் சேக­ரிக்­கப்­ப­டு­வ­தாக தொழி­லா­ளர் நலத்­துறை அமை­சம்­சர் சி.வி.கணே­சன் தெரி­வித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் சட்­டப்­பே­ர­வை­யில் ஆளு­நர் உரைக்கு நன்றி தெரி­விக்­கும் தீர்­மா­னத்­தின் மீது நடை­பெற்ற விவா­தத்­தின்­போது அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.

தமி­ழ­கத்­தில் வட மாநி­லங்­களில் இருந்து வரும் தொழி­லாளர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் ஆதிக்­க­மும் அதி­க­ரித்து வரு­வ­தாக தமி­ழக வாழ்­வு­ரிமை கட்­சித் தலை­வர் வேல்­மு­ரு­கன் கூறினார்.

"வட மாநி­லத்­தி­னர் ஒன்­றரை கோடி பேர், தமி­ழ­கத்­தில் உள்­ள­னர். அவர்­க­ளுக்கு குடும்ப அட்டை, வாக்­கா­ளர் அட்டை வழங்­கப்­ப­டு­கிறது. இதன் மூலம் தமி­ழக அர­சுக்கு மிகப்­பெ­ரிய அபா­யம் ஏற்­பட்­டுள்­ளது என்­பதை முதல்­வர் புரிந்­து­கொள்ள வேண்­டும்," என்­றார் வேல்­மு­ரு­கன்.

மேலும், வெளி­மா­நி­லத் தொழி­லா­ளர்­கள் குறித்து தமி­ழக அர­சி­டம் எந்­த­வி­த­மான தர­வு­களும் இல்லை என்­றும் காவல்­து­றை­யி­ட­மும் உரிய விவ­ரங்­கள் இல்லை என்­றும் வேல்­மு­ரு­கன் தெரி­வித்­தார். இதை­ய­டுத்­துப் பேசிய அமைச்­சர் சி.வி.கணே­சன், வெளி மாநி­லங்­களில் இருந்து வந்து தமி­ழ­கத்­தில் பணி­பு­ரி­யும் தொழி­லா­ளர்­கள் குறித்து உரிய விவ­ரங்­க­ளைச் சேக­ரிக்க கணக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டு வரு­வ­தாகக் கூறி­னார்.