கணித்தது, பெற்றது குறித்து நிதியமைச்சர் விளக்கம்

1 mins read

சென்னை: மத்­திய அர­சி­டம் இருந்து உதவி மானி­யங்­கள் மூலம் ரூ.39,759 கோடி கிடைக்­கும் என கணிக்­கப்­பட்ட நிலை­யில், கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் வரை ரூ.18,367 கோடி மட்­டுமே பெறப்­பட்­டுள்­ள­தாக நிதி­ய­மைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் தெரி­வித்­துள்­ளார்.

மத்­திய அர­சி­டம் இருந்து நிதி பெறு­வ­தில் ஏற்­படும் கால தாம­தங்­க­ளால் மாநில அரசு பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார். கடந்த ஆண்டு மத்­திய அர­சி­டம் இருந்து கிடைக்­கும் எனக் கணிக்­கப்­பட்ட தொகை­யில் 46.20 விழுக்­காடு மட்­டுமே கிடைத்­துள்­ள­தாக அவர் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

"அண்­மை­யில் மத்­திய அரசு நிதி­ய­ளிக்­கும் திட்­டங்­க­ளுக்­கான நிதிப் பரி­மாற்­றம், நிதி விடு­விக்­கும் முறை­யில் ஏற்­ப­டுத்­தி­யுள்ள மாற்­றங்­களால்­ நி­தி பெறு­வ­தில் கால­தா­ம­தம் ஏற்படுகிறது. மேலும் மத்­திய அர­சி­ட­மி­ருந்து பெறும் மானி­யத்­தில் குறிப்­பி­டத்­தக்க அளவு குறை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது," என்­றார் அமைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன்.