பொங்கல் சிறப்புப் பேருந்துகளில் 2 லட்சம் பேர் முன்பதிவு

பொங்கல் சிறப்புப் பேருந்துகளில் 2 லட்சம் பேர் முன்பதிவு

1 mins read

சென்னை: பொங்­கல் பண்­டி­கை­யை­யொட்டி தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளுக்கு இயக்­கப்­படும் பேருந்­து­கள் மூலம் ஏரா­ள­மா­னோர் சொந்த ஊர்­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொண்­ட­னர்.

சென்­னை­யில் இருந்து மட்­டும் சுமார் ஒரு லட்­சம் பேர் சொந்த ஊர்­க­ளுக்­குப் புறப்­பட்­டுச் சென்­ற­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

ஜன­வரி 12 முதல் 14ஆம் தேதி வரை மூன்று நாள்­க­ளுக்கு சென்னை­யில் இருந்து மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளுக்கு சிறப்­புப் பேருந்­து­கள் இயக்­கப்­படும் என அரசு ஏற்­கெ­னவே அறி­வித்­தி­ருந்­தது.

அதே­போல் பொங்­கல் முடி­வ­டைந்த பின்­னர் பல்­வேறு ஊர்­ களில் இ­ருந்து சென்­னைக்கு, 16 முதல் 18ஆம் தேதி­வரை சிறப்­புப் பேருந்­து­கள் இயக்­கப்­படும். மொத்­த­மாக 16 ஆயி­ரம் பேருந்து­கள் இயக்­கப்­பட உள்­ளன.

இந்­நி­லை­யில் சென்­னை­யில் இருந்து இயக்­கப்­படும் பேருந்­து­களில் சுமார் 2 லட்சம் பேர் முன்

­ப­திவு செய்­துள்­ள­னர்.

அர­சின் ஏற்­பா­டு­கள் சிறப்­பாக இருந்­த­தாக பய­ணி­கள் தெரி­வித்­த­னர்.