இளையர் உயிரிழப்பு: ஆறு காவலர்கள் கைது

இளையர் உயிரிழப்பு: ஆறு காவலர்கள் கைது

1 mins read
c0e7e20c-b2ee-44eb-937f-6b7145a60ae9
-

செங்­கல்­பட்டு: சிறு­வர் சீர்­தி­ருத்­தப் பள்­ளி­யில் சேர்க்­கப்­பட்­டி­ருந்த இளையர் ஒரு­வர் சந்­தே­கப்­படும் விதத்­தில் உயி­ரி­ழந்­தது தொடர் பில், ஆறு காவ­லர்­கள் கைது செய்­யப்­பட்டு செங்­கல்­பட்டு சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­னர்.

செங்­கல்­பட்டு மாவட்­டம், தாம்­ப­ரத்தை அடுத்த கன்­ன­டப் பாளை­யம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் கோகுல்ஸ்ரீ, 17.

தாம்­ப­ரத்­தில் உள்ள ரயில்வே குடி­யி­ருப்­பில் பேட்­டரி ஒன்­றைத் திரு­டி­யது தொடர்­பில் செங்­கல்­பட்­டில் உள்ள சிறு­வர் சீர்­தி­ருத்­தப்­ பள்­ளி­யில் கடந்த மாதம் கோகுல்ஸ்ரீ அடைக்­கப்­பட்­டார்.

இந்­நி­லை­யில், டிசம்­பர் 31ஆம் தேதி­யன்று கெட்­டுப்­போன உணவைச் சாப்­பிட்டு இளையர் உயிரிழந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

இதை­ய­டுத்து, தன் மகன் சாவில் மர்­மம் உள்­ள­தாக அவ­ரது தாய் செங்­கல்­பட்டு மாவட்ட ஆட்­சி­ய­ரி­டம் புகார் அளித்­தார்.

இது­தொ­டர்­பாக செங்­கல்­பட்டு குற்­ற­வி­யல் நடு­வர் நீதி­மன்ற நீதி­பதி ரீனா நடத்­திய விசா­ரணை யில், இளையர் கொல்­லப்­பட்­டது தெரி­ய­வந்­தது. சீர்­தி­ருத்­தப் பள்­ளி­யில் இருந்த காவ­லர் ஆனஸ்ட்­ராஜ் இளையரைத் தாக்­கி­ய­போது, அவ­ரது கையை இளையர் கடித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதை­யடுத்து, சரண்­ராஜ், விஜயகுமார், வித்­யா­சா­கர், மோகன், சந்­தி­ர­பாபு ஆகிய காவ­லர்­கள் சேர்ந்து இைளயரைத் தாக்­கி­ய­தில் அவர் உயி­ரி­ழந்­துள்­ளார்.