சென்னை: தைப்பொங்கலுக்கு முந்தைய நாளை ஒவ்வொரு ஆண்டும் போகிப் பண்டிகையாக உற்சாகமாகக் கொண்டாடுவது வழக்கம். அதன்படி, இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.
ஆங்காங்கே, தாரை, தப்பட்டை, மேளதாளம் முழங்க பயனற்ற, பழைய பொருள்களைத் தெருவோரமாகக் கொட்டி மக்கள் எரியூட்டினர்.
"பழையன கழிதலும் புதியன புகுதலும்தான் போகிப் பண்டிகை. தீமை விலகி, நன்மை ெபருக வேண்டும் என்பதற்காகப் பழைய பொருள்களை எரியூட்டினோம்," என ஒரு சில மக்கள் கூறினர்.
இதுபோல் எரிக்கப்பட்ட பொருள்களால் சென்னையும் புறநகர்ப் பகுதிகளும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தன.
சாலையில் எதிரே வரும் வாக னங்கள் தெரியாத அளவுக்குக் கடும் புகை சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாகினர்.
அத்துடன், காற்றின் தரமும் மோசமடைந்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியது.
ஆலந்தூர், பெருங்குடி, கொடுங்கையூர், மணலி, அரும் பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் அதிகம் பாதிக்கப் பட்டதால் நெகிழி, டயர்களை எரிப்பதைத் தவிர்க்குமாறு வாரிய அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்தனர்.
போதுமான சிறப்புப் பேருந்து
இதனிடையே, பொங்கலைக் கொண்டாடுவதற்காகப் போதுமான அளவில் சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படுவதால் சிரமமின்றி சொந்த ஊருக்கு மக்கள் பயணம் செய்தனர். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எந்தப் புகாரும் வரவில்லை என அமைச்சர் சிவசங்கரன் கூறினார்.
100 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரித்த மாநகராட்சி
இதனிடையே, தங்களது அறிவிப்பின்படி, பொருள்களை எரியூட்டுவதன் மூலம் ஏற்படும் காற்றுத் தூய்மைக்கேட்டை கட்டுப்படுத்தும் வகையில், பொது மக்களிடமிருந்து சுமார் 100 மெட் ரிக் டன் பழைய பொருள்களைச் சேகரித்துள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நேற்று அதிகாலை முதலே தாரை, தப்பட்டை முழங்க சிறுவர்களும் பெரியோர்களும் பழைய பொருள்களைத் தீயிட்டு எரித்துப் போகிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம்: ஊடகம்

