போகிக் கொண்டாட்டம்: மோசமடைந்த காற்றின் தரம்

போகிக் கொண்டாட்டம்: மோசமடைந்த காற்றின் தரம்

2 mins read
8df7e472-5b31-48a9-bf32-6692b19bdbb3
-

சென்னை: தைப்­பொங்­க­லுக்கு முந்­தைய நாளை ஒவ்­­வொரு ஆண்டும் போகிப் பண்­டி­கை­யாக உற்­சா­க­மாகக் கொண்­டா­டு­வது வழக்­கம். அதன்­படி, இன்று பொங்­கல் பண்­டிகை கொண்­டா­டப்­பட உள்ள நிலை­யில், நேற்று தமி­ழ­கம் முழு­வ­தும் போகிப் பண்­டிகை கொண்­டா­டப்­பட்­டது.

ஆங்காங்கே, தாரை, தப்பட்டை, மேள­தா­ளம் முழங்க பய­னற்ற, பழைய பொருள்­களைத் தெருவோரமாகக் கொட்டி மக்­கள் எரியூட்டினர்.

"பழை­யன கழிதலும் புதி­யன புகு­தலும்தான் போகிப் பண்டிகை. தீமை விலகி, நன்மை ெபருக வேண்­டும் என்ப­தற்­காகப் பழைய பொருள்­களை எரியூட்டினோம்," என ஒரு சில மக்கள் கூறி­னர்.

இதுபோல் எரிக்­கப்­பட்ட பொருள்­க­ளால் சென்­னை­யும் புற­ந­கர்ப் பகு­தி­களும் புகை மண்­ட­ல­மா­கக் காட்சி அளித்­தன.

சாலையில் எதிரே வரும் வாக னங்கள் தெரியாத அளவுக்குக் கடும் புகை சூழ்ந்தது. இத­னால் வாகன ஓட்­டி­களும் பொதுமக்­களும் சிரமத்துக்கு ஆளாகினர்.

அத்துடன், காற்றின் தரமும் மோசமடைந்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியது.

ஆலந்தூர், பெருங்குடி, கொடுங்கையூர், மணலி, அரும் பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் அதிகம் பாதிக்கப் பட்டதால் நெகிழி, டயர்களை எரிப்பதைத் தவிர்க்குமாறு வாரிய அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்தனர்.

போதுமான சிறப்புப் பேருந்து

இதனிடையே, பொங்கலைக் கொண்டாடுவதற்காகப் போது­மான அள­வில் சிறப்­புப்­பே­ருந்­து­கள் இயக்­கப்­ப­டு­வ­தால் சிர­ம­மின்றி சொந்த ஊருக்கு மக்­கள் பய­ணம் செய்­த­னர். ஆம்னி பேருந்­து­களில் கூடு­தல் கட்­ட­ணம் வசூலிக்கப்­ப­டு­வ­தாக எந்தப் புகா­ரும் வர­வில்லை என அமைச்­சர் சிவ­சங்­க­ரன் கூறினார்.

100 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரித்த மாநகராட்சி

இதனிடையே, தங்களது அறிவிப்பின்படி, பொருள்களை எரியூட்டுவதன் மூலம் ஏற்படும் காற்றுத் தூய்மைக்கேட்டை கட்டுப்படுத்தும் வகையில், பொது மக்களிடமிருந்து சுமார் 100 மெட் ரிக் டன் பழைய பொருள்களைச் சேகரித்துள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நேற்று அதி­காலை முதலே தாரை, தப்பட்டை முழங்க சிறு­வர்­களும் பெரியோர்­களும் பழைய பொருள்­களைத் தீயிட்டு எரித்துப் போகிக் கொண்­டாட்­டத்தில் ஈடு­பட்­ட­னர்.

படம்: ஊடகம்