தமிழ்நாட்டில் உற்சாகத்துடன் பொங்கிய பொங்கல்

தமிழ்நாட்டில் உற்சாகத்துடன் பொங்கிய பொங்கல்

1 mins read
aa4595f1-de3a-4023-8acc-3ab2d713402e
படம்: இந்திய ஊடகம் -
multi-img1 of 3

தை மாதம் முதல் நாளான இன்று தமிழ்நாட்டில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் எழுந்து, புத்தாடை அணிந்து, கோலங்கள் போட்டு, புதிய பொங்கல் பானைகளில் புது அரிசியில் பொங்கல் வைத்து மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

கொவிட்-19 கிருமி பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக தமிழ்நாட்டில் பொங்கல் பெரியளவில் கொண்டாப்படவில்லை. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், பொங்கலோடு உற்சாகமும் பொங்கியது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் பெரும்பாலான கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.