ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு சமத்துவமுறையில் தொடக்கம் அவனியாபுரத்தில் 318 வீரர்கள் 800 காளைகள்: நீயா நானா பார்க்க சீறிப் பாய்ந்த வீரம்

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு சமத்துவமுறையில் தொடக்கம் அவனியாபுரத்தில் 318 வீரர்கள் 800 காளைகள்: நீயா நானா பார்க்க சீறிப் பாய்ந்த வீரம்

2 mins read
fe183438-d73b-4509-acd7-62f15fab1aa6
-
multi-img1 of 2

அவ­னி­யா­பு­ரம்: தமிழ்­நாட்­டில் பொங்­கல் பண்­டி­கை­யை­யொட்டி உல­கப் புகழ்­பெற்ற முப்­பெ­ரும் ஜல்­லிக்­கட்டு வீர விளை­யாட்டு நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு இணங்க, யாருக்­கும் முதல்மரி­யாதை இன்றி சமத்­து­வ­மு­றை­யில் தொடங்­கி­யது.

முதல் கட்டமாக மதுரை அவ­னி­யா­பு­ரத்­தில் பெரும் பாது­காப்­பு­கள், நிபந்­த­னை­க­ளுக்கு இடையே நேற்று காலை 7மணி முதல் நடந்த அந்த வீர விளை­யாட்­டில் ஏறக்­கு­றைய 800 காளை­களும் 318 வீரர்­களும் கள­மி­றங்­கி­னர்.

பதினொன்று சுற்­று­க­ளா­கப் போட்டி நடந்­தது. ஒவ்­வொரு சுற்­றுக்­கும் வெவ்­வேறு வண்ணச் சீருடை கொடுக்­கப்­பட்­டன.

ஒவ்­வொரு சுற்­றி­லும் காளை­களை வெற்­றி­க­ர­மான முறை­யில் அடக்­கும் இரண்டு முதல் மூன்று வீரர்கள் வரை அடுத்த சுற்­றுக்கு அனுப்­பப்­பட்­ட­னர். ஜல்­லிக்­கட்டு வளா­கம் முழு­வ­தும் கண்­கா­ணிப்­புப் படச்­சா­த­னங்­கள் அமைக்­கப்­பட்டு பலத்த பாது­காப்பு ஏற்­பா­டு­கள் இடம்­பெற்­றன.

காளை­க­ளுக்குத் தீங்­கி­ழைப்­பதைத் தடுக்­க­வும் சிறந்த காளை­க­ளை­யும் வீரர்­க­ளை­யும் தேர்வு செய்­ய­வும் தனித்­தனி குழுக்­கள் அமைக்­கப்­பட்டு இருந்­தன.

அவ­னி­யா­பு­ரத்­தில் இறுதி நில­வ­ரப்­படி 45 பேர் காய­ம­டைந்­த­னர். மாடு­பிடி வீரர்­கள் 16 பேர், காளை உரி­மை­யா­ளர்­கள் 20 பேர், பார்­வை­யா­ளர்­கள் ஒன்­பது பேர் அவர்­களில் அடங்­கு­வர்.

சிறந்த காளைக்­கும் வீரருக்கும் கார், இரு சக்­கர வாகனம், தங்க நகை­கள், கட்டில், அண்டா உள்ளிட்ட ஏராளமான பரி­சுப் பொருள்­களைப் பெற்றனர்.

ஒன்பதாவது சுற்று நிறை­வில் மொத்­தம் 578 காளை­கள் களம் கண்­டி­ருந்­தன. மதுரை ஜெய்­ஹிந்த்­பு­ரத்­தைச் சேர்ந்த மாடு­பிடி வீரர் விஜய் 23 காளை­களை அடக்கி முன்­ன­ணி­யில் இருந்­தார். 17 காளை­களை அடக்கி அவ­னி­யா­பு­ரத்­தைச் சேர்ந்த கார்த்தி என்­ப­வர் இரண்­டா­வது இடத்தில் இருந்­தார். 14 காளைகளை அடக்கிய விளாங்குடி பாலாஜி மூன்றாம் இடத்தைப் பெற்றார்.

அவர்களுக்கு தங்கக்காசுகள் பரிசாக வழங்கப்பட்டன. முதல் பரிசு பெற்ற விஜய்க்கு ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கார், முதல்வர் ஸ்டாலின் சார்பில் கிடைத்தது.

அவ­ரி­டம் தோற்­று­விட்ட காளை­களில் ஒன்று அழ­கு­பேச்சி என்ற பள்ளி மாண­விக்­குச் சொந்­த­மா­னது. தனக்­குக் கிடைத்த பரி­சு­க­ளைத் தான் அடக்­கிய காளை­க­ளின் உரி­மை­யா­ளர்­களுக்கே வழங்கி பெரும் பாராட்­டைப் பெற்ற விஜய், மின்சார வாரி­யத்­தில் பணி­யாற்­று­கி­றார்.

2வது பரிசு பெற்ற கார்த்தி விளைாட்டுத் துறை அமைச்­சர் உத­ய­நிதி சார்­பில் இரு சக்­க­ர­வா­க­னத்­தைப் பரி­சா­கப் பெற்­றார்.

மொத்­தத்­தில் அவ­னி­யா­பு­ரம் ஜல்­லிக்­கட்டு மன­நி­றை­வாக முடி­வ­டைந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. அடுத்­த­தாக இன்று பால­மேடு, நாளை அலங்­கா­நல்­லூ­ரில் ஜல்­லிக்­கட்டு நடக்­கிறது.