தமிழகம் முழுவதும் மங்கலப் பொங்கல் விழா

தமிழகம் முழுவதும் மங்கலப் பொங்கல் விழா

1 mins read
e2de1ea6-999c-4a94-ae20-72dd49969041
-

சென்னை: தமி­ழர்­க­ளின் மிக முக்கிய பொங்­கல் பண்­டிகை தை மாதம் முதல் நாளான நேற்று தொடங்­கி­யது.

அந்த நான்கு நாள் விழா­வை­யொட்டி தமி­ழ­கம் முழு­வ­தும் பெரும்­பா­லான கோயில்­களில் சிறப்பு வழி­பா­டு­கள் நடந்­தன.

அனைத்து உயிர்­க­ளுக்­கும் ஆதா­ர­மாக விளங்­கும் சூரி­யனுக்­கும் இயற்­கைக்­கும் உழ­வுக்­கும் நன்றி தெரி­விக்­கும் வித­மாகத் தமி­ழர்­கள் கொண்­டா­டும் பொங்கல் விழா­வை­யொட்டி தமி­ழ­கம் முழு­வ­தும் மக்­கள் புத்­தாடை அணிந்து, வண்ணக் கோல­மிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்­சள், இஞ்சிக் கொத்தைக் கட்டி, மங்­கல­க­ர­மான புத்­த­ரி­சி­யில் பொங்­க­லிட்டு பொங்­கல் பொங்­கியபோது 'பொங்­கலோ பொங்­கல்' என்று கூறி பெரு­ம­கிழ்ச்சி அடைந்­த­னர். பொங்­க­லை­யொட்டி மாநிலத்தின்­கல்வி நிலை­யங்­கள் இம்­மா­தம் 18ஆம் தேதி வரை மூடப்­பட்டன.

கொரோனா கார­ண­மாக கடந்த ஈராண்­டு­க­ளாக உற்­சா­க­மின்றி நடந்த பொங்­கல் விழா இந்த ஆண்­டில் கட்­டுப்­பா­டு­கள் இல்­லாத நிலை­யில் களை­கட்டி உள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. எங்கு பார்த்­தா­லும் கரும்பு, மஞ்­சள், இஞ்­சிக் கொத்து, வாழைப்­பழம், பூ, புத்­தாடை சகி­தம் மக்­களைப் பார்க்க முடிந்­தது.

பொங்­கல் பண்­டி­கையை விம­ரி­சை­யா­கக் கொண்­டா­டும் தமி­ழர்­க­ளுக்கு இந்­திய பிர­த­மர் மோடி தமி­ழி­லேயே வாழ்த்து சொன்­னார்.

தமி­ழக அர­சாங்­கம், சமூக, இதர அனைத்து அமைப்­பு­களை­யும் சேர்ந்த தலை­வர்­களும் வாழ்த்து கூறி­னர். மாநி­லத்­தின் பல இடங்­க­ளி­லும் சமத்­துவ பொங்­க­லும் இடம்­பெற்­றது.