2,500கி.மீ. தொலைவு சென்று இணைய மோசடி மைய இடத்தில் ஊடுருவி இரண்டு பேரைக் கைதுசெய்த தமிழக பெண் காவலர்

2 mins read
77aa8faa-1116-4add-a077-ddf81a182271
-

சென்னை: தமிழ்­நாட்­டில் இணை­யத்­தில் மோசடி வலை விரித்து இரண்டு பேரை ஏமாற்­றிய குற்­ற­வா­ளி­களை 2,500 கி.மீ. பய­ணம் செய்து வெற்­றி­க­ர­மான முறை­யில் பிடித்து வந்து சாதனை நிகழ்த்தி இருக்­கி­றார் தமி­ழக பெண் காவல் அதி­கா­ரி­.

பரங்­கி­ம­லை­யைச் சேர்ந்த அனந்­த­ரா­மன் என்­ப­வ­ரும் வேறு ஒரு பெண்­ணும் இணை­யக் குற்­றச்­செ­யல் ஒழிப்­புப் பிரி­விடம் புகார் தெரி­வித்து, தாங்­கள் இணைய மோச­டிக்­கா­ரர்­க­ளி­டம் லட்­சக்­க­ணக்­கான பணத்தை இழந்­து­விட்­ட­தா­கத் தெரி­வித்­தனர்.

இத­னை­ய­டுத்து அந்­தப் பிரிவைச் சேர்ந்த கவிதா என்ற காவல்­துறை அதி­காரி விசா­ர­ணை­யைத் தொடங்­கி­னார்.

மோச­டிக்­கா­ரர்­கள் ஹரி­யானா மாநி­லத்­தில் உள்ள ஜம்­தாரா என்ற இடத்­தில் இருந்து செயல்­படு­கி­றார்­கள் என்­ப­தும் ஜம்­தாரா இணைய மோச­டிக்­கார்­க­ளின் மைய­மாக இருக்­கிறது என்­ப­தும் அவ­ருக்­குத் தெரி­ய­வந்­தது.

அதைத் தொடர்ந்து அதி­காரி கவிதா தலை­மை­யில் தமி­ழக காவல்­துறை குழு ஒன்று ஹரி­யானா புறப்­பட்­டது.

ஜம்­தாரா சென்ற அதி­காரி கவிதா, உள்­ளூர் காவல்­துறை­யின் உத­வி­யு­டன் அந்த நகருக்குள் துணிச்­ச­லா­கச் சென்று மஞ்­சித் சிங், நாராயண் சிங் என்ற இரு­வ­ரை­யும் அவர்­களின் வீடு­க­ளிலேயே சுற்றி வளைத்துப் பிடித்­தார். பிறகு அந்த இரண்டு பேரை­யும் உள்­ளூர் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்தி அனு­மதி பெற்றுச் சென்­னைக்­குக் கொண்டு வந்­தார்.

அந்த இரு­வ­ரில் நாரா­யண் சிங் என்­ப­வர் நகைக்­கடை முக­வரா­க­வும் மஞ்­சித் சிங் எல்­ஐசி முக­வ­ரா­க­வும் செயல்­பட்டு நாடு முழு­வ­தும் கட்­ட­மைப்­பு­களை நடத்தி ஏரா­ள­மான அப்­பா­விகளை ஏமாற்றி இருக்­கி­றார்­கள் என்­பது தெரி­ய­வந்து இருக்­கிறது.

பல­ரை­யும் தங்­கள் வலை­யில் விழ­வைத்து அதன்­மூ­லம் தங்­கள் கணக்­குக்கு வரும் பணத்தை நகைக்­க­டனை அடைக்­கவும் கடன் அட்­டைக் கடனை அடைக்­ க­வும் இவர்­கள் பயன்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள்.

சென்னை காவல்­து­றை­யிடம் வச­மாகச் சிக்­கிக்­கொண்ட இந்த இரு­வ­ரி­ட­மும் அதி­கா­ரிகள் துருவித் துருவி விசா­ரணை நடத்­து­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.