சென்னை: தமிழக ஆளுநர் ஆர். என். ரவியைத் தரக்குறைவாக பேசியிருக்கும் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநர் அலுவலகம் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்குத் தொடுக்கும்படி தமிழக அரசுக்குச் சென்னை காவல் துறை பரிந்துரைத்துள்ளது.
கிருஷ்ணமூர்த்தி திமுகவைவிட்டு விலக்கப்பட்டுள்ளார்.

