கார் பரிசை வென்ற விஜய்: இனி போட்டியிட மாட்டேன்

கார் பரிசை வென்ற விஜய்: இனி போட்டியிட மாட்டேன்

1 mins read
22da9110-1186-4b1c-827d-a12df10115aa
"முதலிடம் பிடித்து, கார் பரிசைப் பெற்றுவிட்டேன். என் கனவு நிறைவேறிவிட்டது. இனி போட்டியிட மாட்டேன். என் தம்பிகளுக்கு மாடுபிடி பயிற்சியளிப்பேன்." படம்: த ஹிந்து -

அவ­னி­யா­பு­ரம்: மதுரை அவ­னியா புரத்­தில் நடந்த ஜல்­லிக்­கட்­டுப் போட்­டி­யில் 28 காளை­களை அடக்கி காரை பரி­சாக வென்­றுள்ள விஜய் என்ற மாடு­பிடி வீரர், "இனி போட்­டி­களில் பங்­கேற்­கப் போவ­தில்லை," என்று அறி­வித்­துள்­ளார்.

மதுரை மாவட்­டம், அவ­னியா புரத்­தில் பொங்­கல் தினத்­தன்று நடந்த ஜல்­லிக்­கட்­டுப் போட்­டி­யில் ஆக அதி­க­மாக காளை­களை அடக்கி ஏழு லட்­சம் மதிப்­பி­லான காரை மதுரை ஜெயந்­தி­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்த விஜய் பரி­சாக வென்­றார்.

இரண்­டா­வ­தாக 17 காளை களைப் பிடித்த மாடு­பிடி வீரர் கார்த்­திக்கு மோட்­டார் சைக்­கிளும் மூன்­றா­வ­தாக 13 காளை­க­ளைப் பிடித்த பாலாஜி என்­ப­வ­ருக்­குப் பசு­மாடும் பரி­சாக வழங்­கப்­பட்­டன.

"கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக இரண்­டாம் பரி­சாக மோட்­டார் சைக்­கிள்­களைப் பரி­சா­கப் பெற்­றேன். இப்­போது முதல் இடத்­தைப் பிடித்­த­தில் என் கனவு நிறை­வேறிவிட்­ட­தால், இனி எனது தம்பிகளுக்கு மாடு­பிடி பயிற்சி அளித்து அவர்­க­ளைச் சிறந்த மாடு­பிடி வீரர்­க­ளாக உரு­வாக்­கு­வேன். மின்­வா­ரி­யத்­தில் பணி­யாற்றி வரும் எனக்கு வேலை­யில் பதவி உயர்வு கொடுத்­தால் மிக­வும் மகிழ்­வேன்," என்று கூறி­னார் விஜய்.

முதலிடம் பிடித்து, கார் பரிசைப் பெற்றுவிட்டேன். என் கனவு நிறைவேறிவிட்டது. இனி போட்டியிட மாட்டேன். என் தம்பிகளுக்கு மாடுபிடி பயிற்சியளிப்பேன்.

மாடுபிடி வீரர் விஜய்