50 பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட இரு குற்றவாளிகளைச் சுட்டுப் பிடித்த காவலர்கள்

50 பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட இரு குற்றவாளிகளைச் சுட்டுப் பிடித்த காவலர்கள்

2 mins read
c21d149d-1f54-4c1f-92ac-626dd1061b72
50 பெண்களைப் பாலி­யல் வன்­கொ­டுமை செய்­தி­ருக்­க­லாம் என சந்­தே­கப்­படும் இரு­வ­ரைக் காவ­லர்­கள் துப்­பாக்­கி­யால் சுட்­டுப் பிடித்து உள்­ள­னர். படம்: பிக்ஸாபே -

காஞ்­சி­பு­ரம்: திருப்­பெ­ரும்­பு­தூர் அருகே ஏறக்­கு­றைய 50 பெண் களைப் பாலி­யல் வன்­கொ­டுமை செய்­தி­ருக்­க­லாம் என சந்­தே­கப்­படும் இரு­வ­ரைக் காவ­லர்­கள் துப்­பாக்­கி­யால் சுட்­டுப் பிடித்து உள்­ள­னர்.

காஞ்­சி­பு­ரம் மாவட்­டம், திருப்­பெ­ரும்­பு­தூர் எம்­ஜி­ஆர் நக­ரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒரு­வர், தனி­யார் நிறு­வ­னம் ஒன்­றில் பணி­பு­ரிந்து வந்­துள்­ளார்.

சம்­ப­வத்­தன்று தண்­ட­ளம் சாலை­யோ­ரம் நின்று தன் காத­ல­ரு­டன் பேசிக் கொண்­டி­ருந்­துள்­ளார்.

அப்­போது, காக்­கிச் சீரு­டை­யில் வந்த இரு­வர் மிரட்டி, பெண்­ணி­டம் விசா­ரணை செய்­ய­வேண்­டும் என்று கூறி இருசக்­கர வாக­னத்­தில் ஏற்­றிச்­சென்று விசா­ர­ணைக்கு அழைத்­துச்­சென்று பலாத்­கா­ரம் செய்­துள்­ள­னர்.

அதன்­பின்­னர், பெண்­ணி­டம் இருந்த மூன்று சவ­ரன் சங்­கிலி, 2,000 ரூபாய் பணத்­தை­யும் பறித்­துக்­கொண்டு இரு­வ­ரும் தப்பி­விட்­ட­னர்.

இது­தொ­டர்­பாக பெண் அளித்த புகாரை அடுத்து, காவ­லர்­கள் கும்­மி­டிப்­பூண்­டி­யைச் சேர்ந்த நாக­ராஜ் என்­கிற நாகா, 31, பிர­காஷ், 30, ஆகி­யோரை திருப்­பெ­ரும்­பு­தூ­ரில் நடத்­திய வாக­னச் சோத­னை­யின்­போது சுற்­றி­வ­ளைத்­த­னர்.

அப்­போது, பைக்­கில் மறைத்து வைத்­தி­ருந்த துப்­பாக்­கியை எடுத்து காவ­லர்­களை நோக்கி நாக­ராஜ் சுட்­டுள்­ளான்.

பதி­லுக்­குத் தனிப்­படை காவ­லர்­களும் சுட்­ட­தில் நாக­ராஜ் காலில் துப்­பாக்­கிக் குண்டு பாய்ந்­தது. பிர­காஷ் துப்­பாக்­கிச் சூட்­டில் இருந்து தப்­பிச்­செல்ல குதித்­த­போது தவறி விழுந்து இரு முட்டி எலும்­பு­களும் உடைந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இரு­வ­ருக்­கும் காஞ்­சி­பு­ரம் அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது.

இத­னி­டையே, அவர்­கள் இரு­வ­ரும் காஞ்­சி­பு­ரத்­தில் மற்­றோர் இளம்பெண்­ணி­ட­மும் காவலர்­கள் எனக்­கூறி அத்­து­மீ­ற­லில் ஈடு­பட்­டது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

வெளி­யூ­ரில் இருந்து வந்து திருப்­பெ­ரும்­பு­தூர், இருங்­காட்­டுக் கோட்டை, சுங்­கு­வார் சத்­தி­ரம், ஒர­க­டம், மாம்­பக்­கம், வல்­லம் - வட­கால் பகு­தி­களில் உள்ள தனி­யார் நிறு­வ­னங்­களில் வேலைக்­குச் சென்­று­விட்டு காத­லர்­க­ளு­டன் சுற்­றும் பெண்­கள்­தான் இவர்­க­ளின் குறி என்­றும் 50க்கும் மேற்­பட்ட காதல் ஜோடி­களை காவ­லர்­கள் என மிரட்டி பணம் பறித்­த­தோடு, விசா­ரணை என்ற பெய­ரில் பெண்­களை அழைத்­துச் சென்று பாலி­யல் வன்­கொ­டு­மை­யில் ஈடு­பட்­ட­தும் தெரி­ய­வந்­துள்­ளது.

பலாத்­கா­ரம் செய்­யும்­போது காணொளி எடுத்து, அத­னைக் காட்டி பய­மு­றுத்தி மீண்­டும் பலாத்­கா­ரம் செய்­வது, பணம் பறிப்­பது போன்ற செயல்­களில் இரு­வ­ரும் ஈடு­பட்­டுள்­ள­னர்.

தங்­க­ளி­டம் சிக்­கிய பெண்­க­ளின் தோழி­க­ளை­யும் வர­வ­ழைத்து சீர­ழித்­துள்­ள­னர்.

இப்­படி கிட்­டத்­தட்ட 50 பெண்­களை அவர்­கள் பலாத்­கா­ரம் செய்­தி­ருக்­க­லாம் என காவ­லர்­கள் தரப்­பில் கூறப்­ப­டு­கிறது.

ஆனா­லும், சம்­பந்­தப்­பட்ட பெண்­க­ளி­டம் இருந்து புகார் வந்­தால்­தான் உறு­தி­யாக எதை­யும் கூற­மு­டி­யும் என்­றும் காவ­லர்­கள் கூறி­யுள்­ள­னர்.