அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆட்டங்காட்டிய காளைகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆட்டங்காட்டிய காளைகள்

fallback-0

18 Jan 2023 - 5:30 am

1 mins read

உலக அளவில் பிரபலமாக உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று விமரிசையாக நடைபெற்றது. இம்முறை தமிழக இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். பத்து சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 823 காளைகள் பங்கேற்றன. நூற்றுக்கணக்கான வீரர்கள் அவற்றை அடக்க களம் கண்டனர். 26 காளைகளை அடக்கிய அபி சித்தர் என்ற வீரர் முதலிடம் பிடித்தார். அவருக்கு தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது.

படம்: தமிழக ஊடகம்