கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் கொரோனா: ஆகக்குறைவாக 89 பேருக்கு மட்டுமே பாதிப்பு

கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் கொரோனா: ஆகக்குறைவாக 89 பேருக்கு மட்டுமே பாதிப்பு

2 mins read

புதுடெல்லி: இந்­தி­யா­வில் நேற்று முன்­தி­னம் புதி­தாக 89 பேருக்கு கொரோனா தொற்­றுப் பாதிப்பு இருப்­பது உறு­தி­யா­னது. கடந்த மார்ச் மாதத்­துக்­குப் பிறகு பதி­வான ஆகக்­கு­றை­வான அன்றாட பாதிப்பு எண்­ணிக்கை இது­வா­கும்.

கடந்த 2020, மார்ச் 27ஆம் தேதிக்குப் பிறகு பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை இந்த அள­வுக்கு குறைந்­துள்­ள­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கி்­றது.

இதற்­கி­டையே, தொற்­றுப் பாதிப்­புக்­காக சிகிச்சை பெறு­வோ­ரின் மொத்த எண்­ணிக்­கை­யும் 2,035ஆக குறைந்­துள்­ளது என மத்­திய சுகா­தார அமைச்சு செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்தது.

நாடு முழு­வ­தும் கொரோனா தொற்­றுப் பாதிப்­பைக் கட்­டுக்­குள் கொண்டு வர மத்­திய, மாநில அர­சு­கள் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­கள் பலன் அளித்­துள்­ளன. இத­னால் அன்­றாட பாதிப்பு எண்­ணிக்கை குறைந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், செவ்­வாய்க்­கி­ழமை நாடு முழு­வ­தும் 89 பேருக்கு மட்­டுமே தொற்­றுப் பாதிப்பு இருப்­பது உறு­தி­யா­னது.

இதற்­கி­டையே கேர­ளத்­தில் பொது இடங்­களில் மக்­கள் முகக் கவ­சம் அணி­வது கட்­டா­யம் என அம்­மா­நில அரசு அறி­வித்­துள்­ளது. கொரோனா தொற்­றுப்­பரவல் தொடர்ந்து அச்­சு­றுத்­த­லாக இருந்து வரு­கிறது என்­றும் நாடு முழு­வ­தும் கொரோனா பாதிப்பு அதி­க­ரிக்­கக்கூடும் என்ற அச்­சம் நில­வு­வ­தா­க­வும் கேரள அர­சின் செய்­திக்­கு­றிப்பு தெரி­விக்­கிறது.

"வாக­னங்­கள், அர­சுப் பேருந்­து­களில் செல்­லும்­போது அனை­வ­ரும் கட்­டா­யம் முகக் கவ­சம் அணிய வேண்­டும். அனை­வ­ரும் தனி­நபா் இடை­வெ­ளியைக் கடைப்­பி­டிக்க வேண்­டும்," என கேரள அரசு தெரி­வித்­துள்­ளது.

இந்த உத்­த­ரவு ஜன­வரி 12ஆம் தேதி முதல் அடுத்த ஒரு மாதத்­துக்கு அம­லில் இருக்­கும் என்றும் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அச்சம் அடையத் தேவை இல்லை என்றும் அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நீடிக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.