விமானத்தில் தாய்லாந்து திரும்பிய குரங்கு, பாம்புக் குட்டிகள்

விமானத்தில் தாய்லாந்து திரும்பிய குரங்கு, பாம்புக் குட்டிகள்

1 mins read
d2c21fa9-fbfb-46d6-86c6-2b93f5d1e2f6
-

சென்னை: மலைப்­பாம்­புக் குட்­டி­கள், குரங்­குக் குட்­டி­கள், நட்­சத்­திர ஆமை­கள் உள்­ளிட்­ட­வற்­றைப் பயணி ஒரு­வ­ரின் பய­ணப்­பை­களில் இருந்து சென்னை விமான நிலைய சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் கைப்­பற்­றி­னர்.

அப்­ப­யணி இம்­மா­தம் 11ஆம் தேதி புதன்­கி­ழமை தாய்­லாந்­துத் தலை­ந­கர் பேங்­காக்­கில் இருந்து சென்னை வந்­த­டைந்­தார்.

அவர் தமது பய­ணப்­பை­களை விமான நிலை­யத்­தி­லேயே விட்­டுச் சென்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

வரு­கைப் பகு­தி­யில் இரண்டு பய­ணப்­பை­கள் உரிமை கோரப்­ப­டா­மல் இருந்­தது குறித்து சுங்க அதி­கா­ரி­க­ளுக்­குத் தக­வல் அளிக்­கப்­பட்­ட­தாக டைம்ஸ் ஆஃப் இந்­தியா செய்தி தெரி­வித்­தது.

அவ்­விரு பய­ணப்­பை­க­ளை­யும் 'ஸ்கே­னர்' மூலம் சோத­னை­யிட்ட அதி­கா­ரி­கள், 45 மலைப்­பாம்­புக் குட்­டி­கள் (படம்), மூன்று குரங்­குக் குட்­டி­கள், மூன்று நட்­சத்­திர ஆமை­கள், அரிய வகை­யைச் சேர்ந்த எட்­டுப் பாம்­பு­கள் ஆகி­யவை அப்­பை­க­ளுக்­குள் இருந்­த­தைக் கண்­டு­பி­டித்­த­னர்.

அத­னைத் தொடர்ந்து, அந்த விலங்­கு­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு, அவற்­றுக்கு உண­வ­ளிக்­கப்­பட்­டது. மறு­நாள் அவை இன்­னொரு விமா­னம் மூல­மாக பேங்­காக்­கிற்­குத் திருப்­பி­ய­னுப்­பப்­பட்­டன.

அவற்­றைக் கடத்­திக்கொண்டு வந்த பயணி யாரென அடை­யாளம் காணப்­பட்­டு­விட்­டார். அவரை விசா­ர­ணைக்கு முன்­னி லையாகும்­படி சுங்­கத்­துறை அழைப்­பாணை அனுப்­பி­யுள்­ளது.