செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

மேல்முறையீடு நிராகரிப்பு

மசராட்டி காரை ஓட்டிய ஆடவர் கடந்த 2017ஆம் ஆண்டில் காவல் துறை அதிகாரி ஒருவரை அதில் கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றார். அந்த வழக்கில் லீ செங் யான் என்ற ஆடவருக்கு ஆறாண்டு களுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அந்தச் சம்பவத்துக்கு தான் மிகவும் வருந்துவதாகவும் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் கூறிய லீ தனது செயலின் பின்விளைவுகளை தான் உணராமல் போனதாகக் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் லீயின் மசராட்டி கார் பறிமுதல் செய்யப்படும் சாத்தியம் உள்ளது. இதன் தொடர்பில் தனது காரை விற்று அதில் கிடைக்கக்கூடிய பணத்தைக் கொண்டு தனது இரு மகள்களின் நல்வாழ்வுக்கு செலவிட எண்ணியுள்ளதால் காரை பறிமுதல் செய்ய வேண்டாம் என்று நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

அவருடைய மேல்டமுறையீடை நிராகரித்த நீதிபதி அய்டிட் அப்துல்லா, "உனது செயலின் கடுமையை நீ உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை," என்று லீயைக் கடிந்துகொண்டார். திரு லீயின் மசராட்டி காரை பறிமுதல் செய்வது தொடர்பாக வேறொரு நாளில் விசாரணை நடைபெறும்.

கத்தியுடன் இருந்த

பெண்ணுக்குச் சிறை

செயின்ட் ஹில்­டாஸ் உயர்நிலைப் பள்­ளிக்கு வெளியே தனது வயிற்றை கத்­தி­யால் குத்திக்­கொண்டு தலைப்­புச் செய்திகளில் இடம்­பி­டித்த பெண்­, போதைப் பொருள் பயன்­ப­டுத்­தி­ய­தும் ஊக்க மருந்­தால் தூண்­டப்­பட்­டார்

என்­ப­தும் விசா­ர­ணை­யில் தெரியவந்­துள்­ளது. ஜுலி­யான அப்­துல் காதிர் எனும் அந்­தப் பெண்­ணுக்குப் போதைப்­பொ­ரு­ளால் மன­ந­லம் பாதிக்­கப்­பட்­ட­தாக நீதி­மன்­றத்­தில் அர­சாங்­கத் தரப்பு தெரி­வித்­தது.

நேற்று 53 வயது ஜுலி­யா­னா­வுக்கு ஆறு மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. கத்தியும் பேனாக் கத்தியும் வைத்­தி­ருந்­த குற்­றத்­தை­யும் அவர் ஒப்­புக்கொண்­டார்.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் 19ஆம் தேதி தெம்­ப­னி­சில் உள்ள பள்­ளிக்கு வெளியே இந்­தச் சம்­ப­வம் நடை­பெற்­றது. அன்று பள்­ளிக்கு வெளியே சாலை வழி­யாக கத்­தி­யைக் காட்டியபடி ஜுலி­யானா நடந்துகொண்­டி­ருந்­த­தாக காவல்துறைக்­குத் தக­வல் கிடைத்­தது.

அங்கு வந்த காவல்துறையினர் கத்­தி­யைக் கீழே போடு­மாறு கூறி­யும் அதை மதிக்­காமல் கத்­தி­யை சுழற்றிக் காட்டினார். பின்­னர் அவர் தனது வயிற்­றில் குத்­திக் கொண்­டார். ரத்­தம் வழிந்த நிலை­யி­லும் அதி­கா­ரி­கள் நெருங்கிவந்­தால் மேலும் கத்­தி­யால் குத்­திக் கொள்­வ­தாக அவர் மிரட்­டி­னார்.

அதி­கா­ரி­கள் அவரை ஒரு வழி­யாக மடக்கி கைது செய்­த­னர். அவ­ரி­ட­மி­ருந்த கத்­தி­யும் மற்­றொரு பேனா கத்­தி­யும் பறி­மு­தல் செய்­யப்பட்­டன.