ஜல்லிக்கட்டில் பார்வையிழந்த இளையர் மரணம்

ஜல்லிக்கட்டில் பார்வையிழந்த இளையர் மரணம்

1 mins read
41376bc2-5248-4843-a959-cb6211ed4261
-

கரூர்: ஜல்­லிக்­கட்­டின்­போது காளை மாடு முட்­டி­ய­தில் பார்­வையை இழந்த இளை­யர் சிகிச்சை பலன் இன்றி உயி­ரி­ழந்­தார்.

இரு தினங்­க­ளுக்கு முன்­னர் கரூர் மாவட்­டத்­தில் நடை­பெற்ற ஜல்­லிக்­கட்­டின்­போது காய­ம­டைந்த 23 வய­தான சிவக்­கு­மார் என்ற அந்த இளை­யர் திருச்சி அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தார்.

இந்­நி­லை­யில் நேற்று அதி­காலை அவர் உயி­ரி­ழந்­த­தாக மருத்­து­வ­மனை தெரி­வித்­தது. இது­கு­றித்து காவல்­துறை விசா­ரித்து வரு­கிறது.