பட்டாசு வெடித்ததால் வீடு இடிந்து தம்பதி பலி

பட்டாசு வெடித்ததால் வீடு இடிந்து தம்பதி பலி

2 mins read
4b2a964d-5230-47c2-ad0a-7a6a37a1dcc0
-

திண்­டுக்­கல்: வீட்­டில் வைத்­தி­ருந்த பட்­டா­சு­கள் வெடித்­துச் சித­றிய விபத்­தில் கண­வன், மனைவி பலி­யான சம்­ப­வம் திண்­டுக்­கல் மாவட்­டம் செம்­பட்டி பகு­தி­யில் சோகத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

வீரக்­கல் கிரா­மத்­தைச் சேர்ந்த 40 வய­தான ஜெய­ரா­மன் என்­ப­வர் செம்­பட்­டில் அமைந்­துள்ள வணிக வளா­கத்­தில் பட்­டா­சுக் கடை நடத்தி வந்­தார்.

வணிக வளா­கத்­தின் மாடி­யி­லேயே அவர் தனது குடும்­பத்­தா­ரு­டன் வசித்து வந்­துள்­ளார்.

ஜெய­ரா­மன், நாக­ராணி (35 வயது) தம்­ப­தி­யர்க்கு மூத்த மகள் தீப்­திகா (7 வயது), இளைய மகள் கனிஷ்கா (5 வயது) மகன் மோகன் (4 வயது) என மூன்று குழந்­தை­கள் உள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் மாலை ஜெய­ரா­மன் பட்­டா­சுக் கடை நடத்தி வந்த வணிக வளா­கத்­தில் திடீ­ரென பயங்­கர வெடிச்­சத்­தம் எழுந்­தது.

அப்­ப­கு­தி­யில் வசித்த பலர் அந்த வணிக வளா­கத்தை நோக்கி ஓடி­வந்­த­னர். அங்கு ஜெய­ரா­ம­னின் மூன்று குழந்­தை­களும் வெடிச்­சத்­தத்­தைக் கேட்டு பயந்து, அழு­த­படி நின்­றி­ருந்­த­னர்.

இந்­நி­லை­யில், ஒரு­சில விநா­டி­களில் ஜெய­ரா­மன் வசித்த பகுதி முழு­வ­து­மாக இடிந்து விழுந்­தது. இதில் அவ­ரும் மனைவி நாக­ரா­ணி­யும் இடி­பா­டு­களில் சிக்கி உயி­ரி­ழந்­த­னர்.

இந்த விபத்­தின்­போது வணிக வளா­கத்­தின் அரு­கில் நிறுத்தி வைக்­கப்­பட்டு இருந்த ஐந்து கார்­கள் உள்­ளிட்ட வாக­னங்­கள் சேத­ம­டைந்­த­தா­க­வும் ஜெய­ரா­மன் தன் வீட்­டில் குவித்து வைத்­தி­ருந்த பட்­டா­சு­கள் அனைத்­தும் வெடித்­துச் சித­றி­விட்­ட­தா­க­வும் காவல்­துறை தெரி­வித்­தது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

விபத்து குறித்து தக­வல் அறிந்து விரைந்து வந்த காவல்­து­றை­யி­ன­ரும் தீய­ணைப்பு வீரர்­களும் சுமார் ஐந்து மணி நேரம் போராடி இரு­வ­ரது உடல்­க­ளை­யும் மீட்­ட­னர். இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.