திமுக எதிர்கொள்ளும் முதல் தேர்தல் சவால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல்

திமுக எதிர்கொள்ளும் முதல் தேர்தல் சவால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல்

2 mins read

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்­பே­ர­வைத் தொகு­திக்கு எதிர்­வ­ரும் பிப்­ர­வரி 27ஆம் தேதி இடைத்­தேர்­தல் நடை­பெற உள்­ளது. இதற்­கான அறி­விப்பை தேர்­தல் ஆணை­யம் நேற்று வெளி­யிட்­டது.

கடந்த தேர்­த­லில் இத்­தொ­கு­தி­யில் காங்­கி­ரஸ் சார்­பில் திரு­ம­கன் ஈவெரா போட்­டி­யிட்டு வென்­றார். இவர் முன்­னாள் மத்­திய அமைச்­சர் ஈவி­கே­எஸ் இளங்­கோ­வ­னின் மக­னா­வார்.

இந்­நி­லை­யில் கடந்த ஜன­வரி 4ஆம் தேதி 46 வய­தே­யான திரு­ம­கன் ஈவெரா மார­டைப்­பால் கால­மா­னார். இதை­ய­டுத்து ஈரோடு கிழக்கு தொகு­தி­யில் இடைத்­தேர்­தல் நடை­பெற உள்­ளது.

நடந்து முடிந்த சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் தம்மை எதிர்த்­துப் போட்­டி­யிட்ட தமாகா இளை­ஞ­ரணி மாநி­லத் தலை­வர் யுவ­ரா­ஜாவை 8,904 வாக்­கு­கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்­றி­ருந்­தார் திரு­ம­கன் ஈவெரா.

41 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு ஈரோட்­டில் காங்­கி­ரஸ் வெற்­றி­பெற்று, பெரி­யா­ரின் கொள்­ளுப்­பே­ர­னான திரு­ம­கன் ஈவெரா சட்­டப்­பே­ர­வைக்­குச் சென்­றார்.

அவர் உயி­ரி­ழந்­ததை அடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதி காலி­யா­ன­தாக அறி­விக்­கப்­பட்­டது.

மீண்­டும் ஆட்­சி­ய­மைத்த பின்­னர் திமுக எதிர்­கொள்­ளும் முதல் இடைத்­தேர்­தல் இது­வா­கும்.

எனவே இடைத்­தேர்­த­லில் திமுக கள­மி­றங்­குமா அல்­லது காங்­கி­ரஸ் வசம் உள்ள தொகுதி என்­ப­தால் அக்­கட்­சிக்கு ஒதுக்­கப்­ப­டுமா எனும் கேள்வி எழுந்­துள்­ளது.

ஜன­வரி 31ஆம் தேதி ஈரோடு கிழக்­கில் வேட்­பு­மனுத் தாக்­கல் தொடங்­கும் என­வும் பிப்­ர­வரி 7ஆம் தேதி வேட்­பு­மனு தாக்­கல் செய்ய இறுதி நாள் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் பிப்­ர­வரி 8ஆம் தேதி வேட்பு மனுக்­கள் பரி­சீ­லனை செய்­யப்­படும். வேட்பு மனுவை திரும்­பப் பெற பிப்­ர­வரி 10ஆம் தேதி இறுதி நாள்.

இதை­ய­டுத்து 27ம் தேதி வாக்­கு­ப்ப­தி­வுக்குப் பின் மார்ச் இரண்­டாம் தேதி வாக்கு எண்­ணிக்கை நடை­பெ­றும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.