விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள கணஞ்சம்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அங்கு பணியாற்றிய ஆறு ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் மாரீஸ்வரன், கருப்பசாமி, மாரிமுத்து, ராஜ்குமார் ஆகியோருக்கு 100 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மற்றொரு சம்பவம், சிவ காசி அருகே செங்கமலப்பட்டி கிராமத்தில் நடந்துள்ளது. இங்குள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ரவி என்பவர் உயிரிழந்தார். விபத்தில் சிக்கிய சேமுவல் ஜெயராஜ் என்பவரை மீட்ட தீயணைப்புப் படை வீரர்கள் அவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.