நடிகர் வடிவேலுவின் தாயார் உடலுக்கு பிரமுகர்கள் அஞ்சலி, இரங்கல்

1 mins read
17cd7642-4f94-434e-9330-69ad734efef8
-

மதுரை: நகைச்­சுவை நடி­கர் வடி­வே­லு­வின் தாயார் சரோ­ஜினி என்ற பாப்பா மதுரை வீர­க­னூ­ரில் உடல்­ந­லக் குறை­வால் புதன்­கிழமை இரவு கால­மா­னார். அவ­ருக்கு வயது 87.

வடி­வே­லு­வுக்கு திரை பிர­ப­லங்­களும் அர­சி­யல் தலை­வர்­களும் ரசி­கர்­களும் ஆறு­தல் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

"ஆளாக்கி அழகு பார்த்த அன்­னை­யின் மறைவு என்­பது எந்த ஒரு மக­னுக்­கும் ஈடு­செய்ய இய­லாத இழப்­பா­கும். 'வைகைப் புயல்' வடி­வே­லு­வுக்­கும் அவர்­தம் குடும்­பத்­தி­ன­ருக்­கும் ஆழ்ந்த இரங்­க­லை­யும் ஆறு­த­லை­யும் தெரி­வித்­துக்கொள்­கி­றேன்," என்று முதல்வர் மு.க. ஸ்டா­லின் குறிப்­பிட்­டுள்­ளார்.

தமிழ் மாநில காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் ஜி.கே வாசன், அமைச்­சர் அன்­பில் மகேஷ், சசி­கலா உள்­ளிட்­டோரும் வடி­வே­லுவை தொலை­பேசி வழி தொடர்­பு­கொண்டு ஆறு­தல் கூறினர்.

முன்­னாள் மத்திய அமைச்­சர் மு.க.அழ­கிரி, நேரில் சென்று அஞ்­சலி செலுத்தி, ஆறு­தல் தெரி­வித்துள்ளார்.